எந்த மொழியா இருந்தா என்ன? இங்க நான் தான் கிங்கு.. ஆங்கில இசைக்கும் சிறப்பான தமிழ் வரி கொடுத்த கண்ணதாசன்!

First Published | Aug 23, 2024, 4:37 PM IST

Kannadasan : கண்ணதாசன் மறைந்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் கூட, அவரை போல ஒரு பாடலாசிரியர் இன்னும் பிறக்கவில்லை என்றே கூறலாம்.

Kannadasan

சினிமாவில் ஒரு நாயகனை உருவாக்க பாடல்கள் மிக அவசியம், அது எம்.ஜி.ஆர் துவங்கி சிவகார்த்திகேயன் வரை அனைவருக்கும் பொருந்தும். அப்படி எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய் சங்கர் என்று பல சூப்பர் ஹிட் நாயகர்களை, தன் வரிகளால் மிளிரவைத்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. சிறுகூடல்பட்டியில் கடந்த 1927ம் ஆண்டு பிறந்த இந்த மாமேதை, கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 1981ம் ஆண்டு காலமானார்.

விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி அஞ்சனா; அறுவை சிகிச்சைக்கு பின் வெளியிட்ட பதிவு!

Actor MGR

1951ம் ஆண்டு, தமிழில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான சிங்காரி என்ற படம் தான் இவர் முதல் முதலில் பாடலாசிரியராக அறிமுகமான படம். அதன் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் அவர் பாடல்களை எழுதி வந்தாலும், கடந்த 1965ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் பல அற்புதமான பாடல்களை எழுதி, மெகா ஹிட் கவிஞராக மாறினார். எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திற்கு பெரிதும் துணை நின்றது இவருடைய எழுத்துக்கள் என்றால் அது மிகையல்ல.

Tap to resize

Sivaji Ganesan

விஸ்வநாதன் முதல் இளையராஜா வரை பல இசையமைப்பாளர்களோடு பயணித்த கண்ணதாசன், எப்படிப்பட்ட மெட்டு போட்டாலும் சில நிமிடங்களில் அதற்கு வரிகளை கொடுக்கும் திறன்கொண்டவர். 1980ம் ஆண்டு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான படம் தான் "வறுமையின் நிறம் சிவப்பு". அந்த படத்தில் மிக மிக சிக்கலான ஒரு மெட்டுக்கு, அருமையான வரிகளை கொடுத்திருப்பார் கண்ணதாசன், அது தான் "சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" என்ற பாடல். இப்படி பல சாதனைகளை புரிந்துள்ள பாடலாசிரியர் கண்ணதாசன் மேற்கத்திய இசையையும் விட்டுவைக்கவில்லை.

Poet Kannadasan

கடந்த 1966ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான "வல்லவன் ஒருவன்" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைக்கப்பட்டுள்ளது. வேதா என்பவருடைய இசையில் உருவான படம் அது, அன்றைய காலகட்டத்தில் Artie Shaw என்ற அமெரிக்க இசையமைப்பாளரின் Frenesi என்ற ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலை சுட்டு, மெட்டு போட்டுள்ளார் வேதா. ஆனால் அது மேற்கத்திய இசை, ஆகையால் இதற்கும் கண்ணதாசன் பாடல் எழுதுவாரா? என்ற சந்தேகம் படக்குழுவிற்கு எழுந்துள்ளது. 

அப்போது தான் அந்த மேற்கத்திய இசைக்கு, 58 ஆண்டுகள் கழித்தும் மக்கள் ரசிக்கும் ஒரு பாடலை எழுதினார் கண்ணதாசன். அது தான் "பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணிமண்டபம்" என்ற பாடல்.

“என் கணவர் என் தாய்ப்பாலை திருடி குடிப்பார்” ஓபனாக சொன்ன பிரபல நடிகரின் மனைவி!

Latest Videos

click me!