Anjana Rangan
34 வயதாகும் அஞ்சனா ரங்கன், தொலைக்காட்சி மூலம் தன்னுடைய கெரியரை துவங்கியவர். எப்படி தொகுப்பாளினி டிடிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்களோ, அதை போல் அஞ்சனாவுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மிஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் 2008 ஆம் ஆண்டு கலந்துகொண்டு வின்னராக வெற்றி பெற்ற இவர், பின்னர் பட்டு டாட் காம் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார்.
'வாழை' படத்தின் மூலம் ரசிகர்களின் உணர்வை தொட்ட மாரி செல்வராஜ்! கண்ணீர் விட்டு கதறிய தங்கதுரை!
Anjana Rangan
இதைத் தொடர்ந்து பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0, பாக்ஸ் ஆபிஸ், நீங்களும் நாங்களும், நட்சத்திர ஜன்னல், கஃபே டீ ஏரியா, ஜூனியர் சூப்பர் ஸ்டார், சண்டே கொண்டாட்டம், போன்ற பல நிகழ்ச்சிகளை சன் மியூஸிக்கில் தொகுத்து வழங்கினார்.
Anjana Rangan
அவ்வப்போது இவர் விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருவதால், பலர் இவரை திரைப்பட வாய்ப்பு தேடுகிறீர்களா? என கேட்பது உண்டு. ஆனால் தனக்கு பிடித்ததை செய்வதாக கூலாக கூறி வந்தார். மேலும் திருமணத்திற்கு பின்னர் தன்னை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வந்த அஞ்சனா, பாக்சிங், ஜிம்மிங், வெயிட் லிப்டிங் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.
Anjana Rangan
இந்நிலையில் இவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தத்தில், இவருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டு அது... அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இது குறித்து மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அஞ்சனா போட்டுள்ள பதிவில் "அறுவை சிகிச்சைக்கு பின் மனதளவில் வீழ்ச்சி அடைந்து விட்டதை உணர்கிறேன். உடல் அளவிலும் சோர்ந்து விட்டேன். வீட்டிலும் கவனம் செல்லவில்லை. என்னுடைய வேலைகள் நின்று போனது. ஜிம்மில் எனது முன்னேற்றம் அனைத்தும் தற்போது வீணானது. நான் குணமடைய ஆறு வாரங்கள் ஆகும். காயத்திற்கு பின் எனது சகஜநிலைக்கு நான் திரும்ப இன்னும் ஒரு வருடம் ஆகும். நான் முற்றிலும் உடைந்துவிட்டேன். ஆனால் நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்.. அது சரியாகிவிடும். இது முடிவல்ல! என்று.
பிரம்மாண்டத்தின் உச்சம்; ராஜபோக வாழ்க்கை வாழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஹோம் டூர் போட்டோஸ்!
Anjana Rangan
எனக்காக பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் ஸ்லிங்ஸ் மற்றும் பேண்டேஜ்களுடன், வாரக்கணக்கில் வேலை செய்யாமல் இருப்பேன். அனைவருக்கும் ஒரு முறை புதுப்பிப்பாக இதை இடுகையிடுவது, அக்கறையுள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்வதற்கு. மேலும் இந்த வீடியோவில், மாரல் ஆஃப் தி ஸ்டோரி என கூறி... எந்த நேரத்திலும் உங்களுடைய சிரிப்பை பிரச்சினைகளாலும், வலிகளாலும் இழந்து விடாதீர்கள். இது முடிவல்ல ஒவ்வொரு வீழ்ச்சிலும் நமக்கு தங்கம் போன்ற ஏதேனும் ஒரு பாடம் கற்றுக் கொள்ள முடிகிறது. என அஞ்சனா தெரிவித்துள்ளார். ரசிகர்களும் இவர் விரைந்து குணமாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.