'வாழை' படத்தின் மூலம் ரசிகர்களின் உணர்வை தொட்ட மாரி செல்வராஜ்! கண்ணீர் விட்டு கதறிய தங்கதுரை!

Published : Aug 23, 2024, 03:20 PM IST

விஜய் டிவி ஸ்டாண்ட் அப் காமெடியனான பழைய ஜோக் தங்கதுரை, 'வாழை' படத்தை பார்த்த பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
14
'வாழை' படத்தின் மூலம் ரசிகர்களின் உணர்வை தொட்ட மாரி செல்வராஜ்! கண்ணீர் விட்டு கதறிய தங்கதுரை!
Mariselvaraj Movie:

இயக்குனர் மாரி செல்வராஜ், 'மாமன்னன்' படத்தை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'. வாழை பயிரிடும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ஒரு சிறுவனை சுற்றியே (சிவானந்தன்) எமோஷ்னல் கலந்த படமாக உருவாகியுள்ளது.
 

24
Vaazhai movie Characters:

இந்த படத்தில் கலையரசன் (கனி) என்கிற கதாபாத்திரத்திலும், நிகிலா விமல் (பூங்கொடி) என்கிற டீச்சர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி (வேம்பு) என்கிற கதாபாத்திரத்தில் சிவானந்தத்தின் அக்காவாகவும், ஜானகி சிவானந்தத்தன் தாயாகவும் நடித்துள்ளார். பிரியங்கா நாயர் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகை பிரியா ஆனந்த் முதல்... இளம் பெண்கள் வரை; அத்து மீறிய யூடியூபர் பிரஷாந்த் ரங்கசாமி! லீலைகள் அம்பலம்!

34
Vaazhai movie Review

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ள இப்படம், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சூப்பர் சுப்பராயன் 'ஃபார்மர் மாஸ்டர் பிளாண்ட் புரோடக்ஷன்' மூலம் தயாரித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறுவயதில் சந்தித்த அனுபவங்களை கொண்டே இந்த படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

44
Thangadurai Emotions

இந்நிலையில் இந்த படத்தின் பிரிமியர் காட்சி, நேற்று பிரபலங்களுக்கு போட்டு காட்டப்பட்ட நிலையில்... பலர் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இந்த பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  படம் பார்த்த பிக்பாஸ் ஸ்டாண்ட் அப் காமெடியனும் நடிகருமான தங்கதுரை இயக்குனர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து கதறி அழுதுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர், ரசிகர்களின் உணர்வை தொடும் படங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுகின்றன அதே போல் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிரம்மாண்டத்தின் உச்சம்; ராஜபோக வாழ்க்கை வாழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஹோம் டூர் போட்டோஸ்!

click me!

Recommended Stories