பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு தன் பாடல்களில் உவமைகளை பயன்படுத்தி எழுதுவது மிகவும் பிடிக்கும். அவர் ஒரே மாதிரியான உவமைகளை தன்னுடைய வேறு வேறு பட பாடல்களில் பயன்படுத்தி இருக்கும் ஒரு ஆச்சர்ய தகவலை தான் தற்போது பார்க்க உள்ளோம். அந்த இரண்டு பாடல்களுமே வேறலெவல் ஹிட் அடித்த மெலடி பாடல்களாகும், ஒரே மாதிரியான சூழல் இருந்ததால் அந்த வரிகளை நா முத்துக்குமார் 2 பட பாடல்களிலும் பயன்படுத்தி இருக்கிறார்.
24
Na Muthukumar
அந்த இரண்டு படங்கள் வேறெதுவுமில்லை, கடந்த 2007-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்த கல்லூரி மற்றும் கடந்த 2011-ம் ஆண்டு சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடித்திருந்த எங்கேயும் எப்போதும் ஆகிய இரண்டு படங்கள் தான். அதில் கல்லூரி படத்தில் வரும் சரியா இது தவறா பாடலிலும், எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் சொட்ட சொட்ட நனைய வைத்தாய் பாடலிலும் தான் ஒரே வரிகளை பயன்படுத்தி இருப்பார் நா முத்துக்குமார்.
கல்லூரி படத்தில் தான் முதன்முதலில் அந்த பாடல் வரிகளை பயன்படுத்தி இருந்தார். அதில் சரியா இது தவறா பாடலில், ‘ஆண்கள் இதயம் படைப்பித்த கடவுள் மெழுகினிலே அதை படைத்துவிட்டான். பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது மெது மெதுவாய் அதை உருக வைத்தான்’ என எழுதி இருப்பார். இதே வரிகளை தான் எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் சொட்ட சொட்ட நனைய வைத்தாய் பாடலில் அதே உவமையோடு பயன்படுத்தி இருப்பார்.
44
Engeyum eppodhum Movie Song
சொட்ட சொட்ட நனைய வைத்தாய் பாடலில், ‘அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சய் மெழுகில் செய்தானடி, அது ஒவ்வொரு நொடியும் பெண்ணைக் கண்டால் உருகிட வைத்தானடி’ என எழுதி இருப்பார். இந்த இரண்டு பாடல்களிலும் மெழுகை ஆண்களின் இதயத்தோடு ஒப்பிட்டு அது பெண்களால் உருகுகிறது என்கிற அழகான உவமையை பயன்படுத்தி இருப்பார் நா.முத்துக்குமார். இந்த இரு பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.