இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களில் 3 இந்த ஹீரோவோடது தான்! ஷாருக்கான், ரஜினி இல்ல!

First Published | Aug 23, 2024, 3:01 PM IST

600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான கல்கி 2898 ஏடி, உலகளவில் 1041 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

Kalki 2898 AD

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் கல்கி 2898 ஏடி. 600 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவான இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Kalki 2898 AD

மகாபாரதப் போருக்கு 6000 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் நடக்கும் இந்த கதையில், பிரபாஸ் பைரவா என்ற ரோலிலும், தீபிகா படுகோன், SUM-80 என அழைக்கப்படும் சுமதி என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.அமிதாப் பச்சன் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமாவாகவும், கமல்ஹாசன் யாஸ்கின் என்ற சுப்ரீம் லீடராகவும் நடித்துள்ளார்.

Tap to resize

Kalki 2898 AD

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் நேற்று ஓடிடியில் வெளீயானது. கல்கி 2898 ஏடி படத்தின் ஹிந்தி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள உரிமையை அமேசான் பிரைம் வீடியோவும் பெற்றுள்ளது. கல்கி 2898 ஏடி படம் உலகளவில் ரூ.1041 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இந்திய வசூல் ரூ.766.65 கோடியாகவும், வெளிநாட்டு வசூல் ரூ275 கோடியாகவும் உள்ளது.

Kalki 2898 AD

முன்னதாக எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த ஆர்ஆர்ஆர் இந்தியாவில் ரூ. 782.2 கோடி) வசூல் செய்தது. யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 இந்தியாவில் ரூ. 859.7 கோடி வசூல் செய்தது. பிரபாஸ், ராணா டக்குபதி மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகுபலி 2 இந்தியாவில் 1032 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2, RRR ஆகிய படங்களை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. 

இந்த பட்டியலில் கல்கி 2898 ஏடி படம் 4-வது இடத்தில் உள்ளது.

உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் இதுவரை அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்களில் எந்த இந்திய நடிகரின் படங்கள் அதிகம் உள்ளது தெரியுமா? அது ஷாருக்கானோ அல்லது ரஜினிகாந்தோ அல்ல. அது பிரபாஸ் தான். பிரபாஸ் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்துள்ளார், இந்த படங்கள் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்களில் இடம் பிடித்துள்ளன. அதாவது இந்த பட்டியலில் பாகுபலி 2 முதலிடத்திடலும், கல்கி 2898 ஏடி 4-வது இடத்தில் உள்ளது. பாகுபலி 1 இந்த பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.421 கோடி ஆகும்

Jawan

5-வது இடத்தில் ஜவான் மற்றும் ஏழாவது இடத்தில் உள்ள பதான் (ரூ 543.09 கோடி) உட்பட ஷாருக்கானின் இரண்டு படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. ரன்பீர் கபூர் நடித்த அனிமல் (ரூ. 553.87 கோடி) இந்த பட்டியலில் 6-வது இடத்திலும் சன்னி தியோல் நடித்த கதார் 2 (ரூ. 525.7 கோடி) இந்த பட்டியலில் 8-வது இடத்திலும், ரஜினிகாந்த் நடித்த 2.0 10-வது இடத்திலும் உள்ளது. 

Prabhas Kalki 2898 AD

பிரபாஸ் தற்போது ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?

2024 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூ. 100 முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். கல்கி 2898 ஏடி படத்திற்காக பிரபாஸ் ரூ.150 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!