இன்ஸ்டாகிராம் Influencer மற்றும் திரைப்பட விமர்சகருமான பிரஷாந்த் ரங்கசாமி எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத சோசியல் மீடியா பிரபலமாக பார்க்கப்படுபவர். ஏற்கனவே இவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ள நிலையில், தற்போது பெண்களிடம் அத்து மீறி பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
25
Priya Anand Tweet
நடிகை பிரியா ஆனந்த், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்த போது... 'மொரட்டு சிங்கிள்ஸ் பாவம்' என பிரியா ஆனந்தை இவர் டேக் செய்த நிலையில், இதற்கு அவர் கடுப்பாகி 'பாண்டா' என பதிலடி கொடுத்தார்.
இதை தொடர்ந்து பெண் ஒருவரிடம் காதல் மன்னனாக மாறி, அவருக்கு மெசேஜில் வலைவிரித்த நிலையில், இது குறித்த ஸ்கிரீன் ஷார்ட் வைரலாகி வருகிறது. அதில் அந்த பெண் எப்படி இருக்கீங்க என கேட்க, அதற்கு பிரஷாந்த், 'நீங்கள் என்னுடைய பல நாள் காதல்' எனக் கூறி பேச துவங்கியுள்ளது போல் சில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
45
Viral Trolls
அந்த பெண் நாசுக்காக இவரை தவிர்க்க நினைப்பது அவர் கொடுத்த பதிலில் இருந்தே பார்க்க முடிகிறது. ஆனால் பிரஷாந்த் "உண்மையா செல்கிறேன் நீ செம்ம ஃபிகர்'' என்றெல்லாம் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் 'பெண்களை பிரஷாந்த் ரங்கசாமியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்' என்று #SaveGirlsFromPrashanth என பதிவிட்டு வருகிறார்கள்.
அதே போல் இதற்கு முன்னர் இவர் பதிவிட்ட சில பதிவுகளை மீண்டும் வைரலாக்கி வரும் நிலையில் பிரஷாந்த் ரங்கசாமிக்கு எதிராக நெட்டிசன்கள் போட்டு வரும் கமெண்ட்ஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், பிரஷாந்துக்கு எதிராக சிலர் அவதூறு பரப்பும் விதமாகவே இதுபோன்ற விஷயங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. எந்த ஒரு சர்ச்சைக்கும் துணிந்து பதில் கூறும் பிரஷாந்த் இதுகுறித்து என்ன விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளான.