வில்லங்கமான இயக்குனரின் படத்தில் வில்லியாக நடிக்கும் திரிஷா... அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?

First Published | Aug 23, 2024, 1:01 PM IST

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அடுத்ததாக சர்ச்சைக்குரிய இயக்குனரின் பான் இந்தியா படத்தில் வில்லியாக நடிக்க உள்ளாராம்.

Trisha

40 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வரும் திரிஷா, தற்போது தன்னைப்போன்றே திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் 44 வயது பேச்சிலர் நடிகர் பிரபாஸ் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளாரா. இவர்கள் இருவரும் ஏற்கனவே வர்ஷம் என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தான் தமிழில் மழை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

Trisha, Prabhas

திரிஷாவும் பிரபாஸும் ஜோடியாக நடிக்க உள்ள படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளாராம். இப்படத்திற்கு ஸ்பிரிட் என பெயரிடப்பட்டு உள்ளது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா ஒரு வில்லங்கமான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் ஆகிய இரண்டு படங்களுமே சர்ச்சையில் சிக்கின. அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தி காட்டியதாக சர்ச்சை எழுந்தது.

இதையும் படியுங்கள்... பிரம்மாண்டத்தின் உச்சம்; ராஜபோக வாழ்க்கை வாழும் மெஹா ஸ்டார் சிரஞ்சீவியின் ஹோம் டூர் போட்டோஸ்!

Tap to resize

Trisha Pair up with Prabhas

ஆனால் அந்த படத்தை ஆஹா.. ஓஹோ என புகழ்ந்து பதிவிட்டிருந்தார் திரிஷா. தற்போது அவர் இயக்கத்திலேயே திரிஷா நடிக்க உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படத்தில் திரிஷா வில்லியாக நடிக்க உள்ளாராம். நடிகர் பிரபாஸ் ஸ்பிரிட் படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில் வில்லன் பிரபாஸுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளாராம்.

Sandeep Reddy vanga's Spirit movie

நடிகை திரிஷா இதற்கு முன்னர் தனுஷின் கொடி படத்தில் வில்லியாக மிரட்டி இருந்தார். அதன்பின்னர் தற்போது அவர் பிரபாஸ் படத்தில் வில்லியாக நடிக்க உள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இது பான் இந்தியா படம் என்பதால் இப்படத்தின் மூலம் திரிஷாவுக்கு பான் இந்தியா அளவில் ரீச் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ‘ஐயரு பொண்ணு மீன்வாங்க வந்தா’ நா முத்துக்குமார் எழுதிய இந்த பாடல் வரியில் இப்படி ஒரு லவ் ஸ்டோரி ஒளிஞ்சிருக்கா!

Latest Videos

click me!