கவிஞர் நா.முத்துக்குமார் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். இவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலம் கடந்து கொண்டாடப்படுவதற்கு காரணம் அதில் உள்ள உணர்வுப்பூர்வமான வரிகள் தான். நா.முத்துக்குமாரின் பாடல்களில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அதில் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து சில வரிகளை எழுதி இருப்பார். அப்படி ஒரு பாடல் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
Lyricist Na Muthukumar
அப்படி வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து நா.முத்துக்குமார் எழுதிய பாடல் தான் ‘தேரடி வீதியில்’ பாடல். ரன் படத்தில் இடம்பெறும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. வித்யாசாகர் இசையமைத்திருந்த இப்பாடலில் ஒரு காதல் கதையை ஒரு வரியில் சொல்லி இருந்தார் நா முத்துக்குமார். அந்த பாடலில் இடம்பெற்ற ஒரு பேமஸ் ஆன வரிகளில் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’ என்கிற வரியும் ஒன்று.
அந்த வரிக்கு பின்னணியில் தான் ஒரு லவ் ஸ்டோரி ஒளிந்திருக்கிறது. அது எனன்வென்றால், நா முத்துக்குமார் 7வது படிக்கும்போது அவரது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அவரது நண்பர் பிராமின் குடும்பத்தை சேர்ந்தவர். ஒருமுறை அந்த நண்பரின் அக்கா நா.முத்துக்குமாரிடம் பணம் கொடுத்து மீன் வாங்கிவர சொல்லி இருக்கிறார். அவரும் அந்த காசுக்கு மீன் வாங்கி வந்துகொடுக்க, அந்த மீன் வாடை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ஊதுபத்தி, சாம்பிரானி எல்லாம் எரியவிட்டிருந்தாராம். பின்னர் அந்த மீனை வைத்து மீன் குழம்பு சமைத்து நா முத்துக்குமாரை டேஸ்ட் பார்க்க சொல்லி இருக்கிறார்.
44
Secret Behind Run Movie theradi veethiyil song
அசைவமே தொடாத அந்த பெண் மீன் குழம்பு சமைக்க காரணம் அவருடைய காதல் தானாம். அவர் ஒரு டுட்டோரியல் மாஸ்டரை காதலித்திருக்கிறார். அவருக்கு மீன் குழம்பு ரொம்ப புடிக்குமாம். அதற்காக தோழியிடம் மீன் குழம்பு வைக்க கற்றுக் கொண்டு அவருக்காக ருசியான மீன் குழம்பையும் வைத்திருக்கிறார். அந்த காதலுக்கு நா முத்துக்குமார் தான் தூதுவராக இருந்திருக்கிறார். இந்த காதல் கதையை தான் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’ என ஒற்றை வரியில் அடக்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் நா முத்துக்குமார்.