ஒவ்வொரு வாரமும், சின்னத்திரை சீரியல்களின் வெற்றி TRP-யை கொண்டே கணக்கிடப்படும் நிலையில், இந்த வருடத்தின் 33 வது வாரத்தில், டாப் 10 இடத்தை கைப்பற்றி 10 சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சன் டிவி தொலைக்காட்சியில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் 'சிங்க பெண்ணே' சீரியல், இந்த வாரம் 9.13 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் நிலையில், இதற்கு காரணம் மகேஷ் என்கிற உண்மை தெரியவருமா? அல்லது அன்பு தான் பழி சொல்லுக்கு ஆளாவாரா? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தெடர்ந்து 8.76 டிஆர்பி புள்ளிகளுடன் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல், இரண்டாவது இடத்தை கைப்பற்றி உள்ளது. மீனா மீது முத்து கோவத்தில் இருந்ததால்... சந்தோஷத்தில் இருந்த விஜயா, தற்போது முத்து சமாதானம் ஆகிவிட்டதால் கடுப்பாகிறார். கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல்... பல திருப்பு முனைகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவதே இந்த சீரியலில் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
25
Kayal and Vanathai pol Serial TRP
கயல் - எழில் திருமணம் நடைபெறுமா? என்கிற மிகப்பெரிய கேள்வி குறியோடு சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் இந்த வாரம் 8.68 டிஆர்பி புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில், கடந்த வாரத்துடன் முடிவடைந்த பாசமலர் அண்ணன் - தங்கைகளின் கதையை போல் ஒளிபரப்பாகி வந்த 'வானத்தை போல' தொடர் 8.23 புள்ளிகளுடன் உள்ளது.
பிக்பாஸ் கேபிரியல்லா ஹீரோயினாக நடித்து வரும் 'மருமகள்' சீரியல் 8.3 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட 'மல்லி' தொடர் இந்த வாரம் 7.75 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் TRP பட்டியலில்... கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட 'சுந்தரி' சீரியல் மளமளவென சற்று முன்னேறி, இந்த வாரம் 7.20 புள்ளிகளுடன் TRP -யில் 7-வது இடத்திற்கு வந்துள்ளது. சுந்தரியிடம் இருந்து எப்படியும் தமிழை பிரிக்க வேண்டும் என கார்த்திக் முயற்சி செய்து வரும் நிலையில், சுந்தரி தன்னுடைய குழந்தையை அவரிடம் இருந்து மீட்டு... கிருஷ்ணாவை திருமணம் செய்வாரா என்கிற கடைசி அத்தியாயத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
45
Vijay TV Baakiyalakshmi Serial
விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியல் 6.94 புள்ளிகளுடன் 8-வைத்து இடத்தையும், விஜய் டிவியில் இரண்டாம் பாகம் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் 6.33 டிஆர்பி புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தையும் கைப்பற்றி உள்ளது. கதிர் தங்கமயிலால் ஒரு பிரச்சனையில் சிக்கி மீண்ட நிலையில், தற்போது தங்கமயிலே தானாக சென்று புது பிரச்சன்னையில் சிக்கியுள்ளார். இதை எப்படி சமாளிப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
10-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியல் 6.1 டிஆர்பி புள்ளிகளுடன் உள்ளது. தமிழுடன் வாழ்ந்த போது கெத்தாக இருந்த சேது... குடிக்கு அடிமையாகி தமிழையும், அவரின் குடும்பத்தியும் வெறுக்கும் நிலையில், தன்னுடைய அப்பா கைது செய்யப்பட்டதற்கு காரணம் தமிழ் இல்லை தாமரை தான் என்கிற உண்மை தெரிய வருவது எப்போது? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.