இதல்லவா பிரெண்ட்ஷிப்! நட்புக்காக ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் நடித்த டாப் 5 ஹீரோஸ்

Published : Aug 23, 2024, 10:41 AM IST

சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கு டாப் நடிகர்கள் சிலர் நட்புக்காக ஒத்த ரூபா கூட வாங்காமல் இலவசமாக நடித்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

PREV
16
இதல்லவா பிரெண்ட்ஷிப்! நட்புக்காக ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் நடித்த டாப் 5 ஹீரோஸ்
Tamil Actor Act without getting Salary

சினிமாவில் போட்டி என்பது அதிகம் இருக்கும். அதிலும் அந்த நடிகர் இவ்வளவு சம்பளம் வாங்கினால் எனக்கு அதைவிட அதிக சம்பளம் வேண்டும் என கேட்கும் நடிகர்களுக்கு மத்தியில், ஒரு சில நடிகர்கள் சம்பளமே வாங்காமால் நடித்திருக்கிறார். அதுவும் நட்புக்காக ஒரு ரூபா கூட வாங்காமல் கெளரவத் தோற்றத்தில் நடித்து இருக்கிறார். அந்த தராள பிரபுக்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
vijayakanth

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த்தை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் தன்னுடைய மகன் விஜய்யை மக்கள் மத்தியில் பிரபலமாக்க செந்தூரப் பாண்டி என்கிற திரைப்படத்தில் விஜயகாந்தை கேமியோ ரோலில் நடிக்க அணுகினாராம். எஸ்.ஏ.சி மீதுள்ள அன்பால் ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். 

36
Ajithkumar

அஜித்குமார்

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் அஜித்குமாரும் ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் தான் இங்கிலிஷ் விங்கிலிஷ். இந்தி படமான இதில் ஸ்ரீதேவி உடன் விமானத்தில் பயணம் செய்யும் காட்சியில் நடித்திருப்பார் அஜித். ஸ்ரீதேவி மீதுள்ள மரியாதை காரணமாக அப்படத்தில் நடிக்க அஜித் சம்பளமே வாங்கவில்லை.

இதையும் படியுங்கள்... ஜெயிச்சிட்ட மாறா... சொந்தமாக தனி விமானம் வாங்கிய சூர்யா! ஆத்தாடி அதன் விலை இத்தனை கோடியா?

46
Prabhu Deva

பிரபுதேவா

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் சில ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவர் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றினார். வடிவேலு மீதுள்ள பாசத்தால் அப்படத்தில் சம்பளமே வாங்காமல் பணியாற்றினார் பிரபுதேவா.

56
Suriya

சூர்யா

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் என்றே சொல்லலாம். 5 நிமிடமே வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் சூர்யா. அக்கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒரு ரூபா கூட சம்பளம் வாங்கவில்லை. எல்லாம் கமல் மீது உள்ள அன்பு தான் காரணம்.

66
Simbu

சிம்பு

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் சிம்பு. இவர் நடிகர் விஜய்க்காக வாரிசு படத்தில் சம்பளமே வாங்காமல் பணியாற்றினாராம். வாரிசு பட புரமோஷனுக்காக தீ தளபதி பாடல் காட்சியை சிம்புவை வைத்து படமாக்கி இருந்தனர். அப்பாடலில் செம மாஸாக நடனம் ஆடி இருந்த சிம்பு அதற்காக ஒத்த பைசா கூட வாங்கவில்லையாம். 

இதையும் படியுங்கள்... அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் திருமணத்தை நிறுத்த கையை அறுத்துக் கொண்ட ஜான்வி கபூர்! ஆனா..

Read more Photos on
click me!

Recommended Stories