“என் கணவர் என் தாய்ப்பாலை திருடி குடிப்பார்” ஓபனாக சொன்ன பிரபல நடிகரின் மனைவி!

Published : Aug 23, 2024, 04:09 PM IST

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி தாஹிரா காஷ்யப் எழுதிய புத்தகத்தில், ஆயுஷ்மான் தனது தாய்ப்பாலைத் திருடி புரோட்டீன் ஷேக்குகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

PREV
16
“என் கணவர் என் தாய்ப்பாலை திருடி குடிப்பார்” ஓபனாக சொன்ன பிரபல நடிகரின் மனைவி!
Ayushmann Khurrana

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான விக்கி டோனர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் ஆயுஷ்மான் குர்ரானா. இந்த படத்தில் ஸ்பெர்ம் டோனராக நடித்திருந்த அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

26
Ayushmann Khurrana

இதை தொடர்ந்து ஆயுஷ்மான் நடிப்பில் வெளியான டம் லகா கே ஹைஷா என்ற படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக பரேய்லி கி ஃபர்ஃபி, சுப் மங்கல் சாவத்ன், பதாய் ஹோ, ட்ரீம் கேர்ள், பாலா, அந்தாதுன், ஆர்டிகிள் 15 என பல ஹிட் படங்களில் நடித்தார். ஆயுஷ்மான் குர்ரானா கடைசியாக ட்ரீம் கேர்ள் 2 படத்தில் நடித்திருந்தார்.

36
Ayushmann Khurrana

2008 ஆம் ஆண்டில், ஆயுஷ்மான் தனது குழந்தைப் பருவ தோழியும், காதலியுமான தாஹிரா காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  ஆயுஷ்மான் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிதாக பொதுவெளியில் பேசமாட்டார்.

46
Ayushmann Khurrana

ஆனால் ஆயுஷ்மானின் மனைவியும் எழுத்தாளரான 2021 ஆம் ஆண்டில்,தாஹிரா காஷ்யப், ஒரு தாயாக இருப்பதன் 7 பாவங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில், தனது கணவர் ஆயுஷ்மான் குர்ரானா தனது தாய்ப்பாலைத் திருடி தனது புரோட்டீன் ஷேக்குகளுக்குப் பயன்படுத்தியதை கூறியிருந்தார்.

56
Ayushmann Khurrana

அவரின் புத்தகத்தில் “ ஆயுஷ்மான் படுக்கையறையில் புரோட்டீன் ஷேக்கை குடித்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். நான் அவரிடம் தாய்ப்பாலைக் காணவில்லை என்று சொன்னேன். அப்போது அவர் வினோதமாக சிரித்துவிட்டு, மீசையில் இருந்த பாலை துடைத்துக்கொண்டே அது சரியான  வெப்பநிலையைக் கொண்டிருந்தது, அதிக சத்தானது என்பதால் நான் குடித்துவிட்டேன் என கூறினார். எனவே ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் தாய்ப்பால் பாட்டிலை திருடாமல் இருக்க மறைத்து வைத்தேன்” என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

66
Ayushmann Khurrana

பின்னர் ஆயுஷ்மானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ ஒரு வாசகராக, இது பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால்  நான் மிகவும் தனிப்பட்ட நபர். என் மனைவி என்னை போல் இல்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் நாம் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கிறோம். இது சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் நான் அதைப் படிக்கவில்லை. எனக்குத் தெரியாது! அவருக்கு வேண்டிய விஷயங்களை அவர் செய்வார். நான் அப்படிப்பட்ட நபர் இல்லை” என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories