தல.. தளபதி மிஸ் பண்ண படங்கள் - அதுவும் சூப்பர் ஹிட்டான படங்கள் பற்றி தெரியுமா?
Ansgar R |
Published : Aug 23, 2024, 05:32 PM IST
Thala Thalapathy : தமிழ் திரையுலகை பொறுத்தவரை இந்த மூன்றெழுத்து மந்திரம் மிகவும் பிரபலம். எம்.ஜி.ஆர் - சிவாஜி, கமல் - ரஜினி அடுத்தபடியாக விஜய் - அஜித்.
தங்களுடைய அயராத முயற்சியினால் இன்று கோலிவுட் உலகின் டாப் நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களுடைய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி இருந்தாலும், சில நேரங்களில் இவர்கள் நடிக்க மிஸ் செய்த திரைப்படங்களும் கூட சூப்பர் ஹிட் படங்களாக மாறி உள்ளது.
அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான "நேருக்கு நேர்" படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அஜித் தான். ஆனால் அப்போது அஜித்துக்கு ஏற்பட்ட சில கால்ஷீட் பிரச்சனையால் பாதியில் படத்தில் இருந்து விலகினார்.
அஜித்தை வைத்து "அமர்க்களம்" என்கின்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் சரண், அடுத்தபடியாக ஏ.வி.எம் தயாரிப்பில் அஜித்தை வைத்து பிளான் செய்த திரைப்படம் தான் ஜெமினி. ஆனால் அப்படத்தில் இருந்து திடீரென அஜித் விலக, அதன் பிறகு தான் நடிகர் விக்ரம் அப்படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
34
Dhool Movie
விக்ரம் நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான "தூள்" திரைப்படத்தில் முதலில் நடிக்க தேர்வானது தளபதி விஜய் தான். ஆனால் அப்போது வசீகரா மற்றும் வேறு சில திரைப்படங்களில் அவர் பிஸியாக நடித்து வந்த காரணத்தினால் அப்படத்தில் நடிக்க அவர் கால்சீட் கொடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தான், ஏற்கனவே "தில்" என்கின்ற திரைப்படத்தை விக்ரமை வைத்து ஹிட் கொடுத்த தரணி, மீண்டும் அவரையே வைத்து "தூள்" படத்தை எடுத்தார்.
44
Mudhalvan Movie
நடிகர் அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று "முதல்வன்". ஆனால் இயக்குனர் சங்கர் முதலில் அந்த திரைப்படத்தில் நடிக்க அணுகியது நடிகர் விஜய்யை தான். சில காரணங்களால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டு மெகா ஹிட்டானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.