உயிரை கொடுத்து உழைத்த கமலின் டாப் 4 படங்கள்.. ஆனா வணிக ரீதியா ஹிட் இல்ல - காரணம் ரஜினியா?

First Published | Aug 23, 2024, 6:12 PM IST

Kamal Haasan : தமிழ் சினிமாவின் பெருமையாக, இந்திய சினிமாவின் அடையாளமாக கடந்த 65 ஆண்டு காலமாக திரைத்துறையில் பயணித்து வரும் சூப்பர் ஹிட் நடிகர் தான் கமல்ஹாசன்.

Guna Movie

தமிழ் திரையுலகை பொருத்தவரை அதிக அளவிலான எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படங்களை எடுத்த ஒரே இயக்குனரும், நடிகரும் கமல் மட்டுமே என்றல் அது மிகையல்ல. ஆனால் அவர் மிகவும் கடினப்பட்டு உழைத்து வெளியிட்ட படங்களோடு, வெளியான வேறு சில படங்களால், வியாபாரி ரீதியாக கமலின் படங்கள் வெற்றி அடையாமல் போனது.

அந்த வகையில் 1991ம் ஆண்டு கமல் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான "குணா" திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக். இன்று வரை அப்படி ஒரு படத்தை எந்த ஒரு வகையிலும் வேறொரு இயக்குனரால் கொடுக்கமுடியவில்லை. ஆனால் அப்படம் வெளியான அதே நாளில் வெளியான "தளபதி" அதிக வசூலை தட்டிச்சென்றது.

தல.. தளபதி மிஸ் பண்ண படங்கள் - அதுவும் சூப்பர் ஹிட்டான படங்கள் பற்றி தெரியுமா?

Sathi Leelavathi

இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப திரைப்படம் தான் "சதிலீலாவதி". கமல் இந்த திரைப்படத்தில் கொங்கு தமிழ் பேசி நடித்து அசத்தியிருப்பார். இருப்பினும் சதிலீலாவதி வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பாட்ஷா" திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. 

Tap to resize

Kuruthi Punal

ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் "மீரா" திரைப்படத்திற்கு பிறகு இயக்குனராக களம் இறங்கிய திரைப்படம் தான் "குருதிப்புனல்". கமல் மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவான மிக நேர்த்தியான ஒரு திரைப்படம் அது. அந்த கிளைமாக்ஸ் காட்சி ஒன்றுக்காகவே அப்படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. பாடல்களே இல்லாமல் வெளியான அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், அதே 1995ம் ஆண்டு அக்டோபர் 23ல் வெளியான ரஜினியின் "முத்து" திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

Mahanadhi

இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் "மகாநதி". திசை மாறிப் போகும் ஒரு குடும்பத்தின் கதையை மிக நேர்த்தியாக சொன்ன திரைப்படம் அது. பெர்ஃபார்மன்ஸ் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம், வசூல் ரீதியாக ஹிட் ஆகவில்லை. காரணம் அதே 1994ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக மாறியது.

எந்த மொழியா இருந்தா என்ன? இங்க நான் தான் கிங்கு.. ஆங்கில இசைக்கும் சிறப்பான தமிழ் வரி கொடுத்த கண்ணதாசன்!

Latest Videos

click me!