சமீப காலமாகவே நடிகர்கள் அவரவர்கள் நடிக்கும் படங்களில் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தாலும், சாக்லேட் பாய் இமேஜ் கொண்ட... மூன்று நடிகர்கள் கூட சொந்த குரலில் பாடி உள்ளனர் அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தளபதி விஜய் தான் நடிக்கும் படங்களில் ரசிகர்களுக்காகவே ஏதாவது ஒரு பாடலை பாடி விடுகிறார். அப்படி இவர் பாடும் பாடல்களும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதே போல் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் அவர்களின் பங்கிற்கு அவர்கள் நடிக்கும் படங்களில் பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
24
Ajith sung a Song in Vaali movie
ஆனால் இவர்களை தாண்டி திரைப்பட நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டும் அஜித், அரவிந்த் சாமி, மற்றும் பிரஷாந்த் ஆகியோரும் தலா ஒரு பாடல்களை மட்டுமே அவரவர் படங்களில் பாடியுள்ளனர் . அந்த வகையில் தல அஜித், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடித்த 'வாலி' படத்தில், நடிகை ஜோதிகாவுடன் இணைந்து ஆடிய 'ஓ சோனா... ஓ சோனா பாடலை' பாடியுள்ளார். இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி, இயக்குனர் லக்ஷ்மணன், ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமியை வைத்து இயக்கிய 'போகன்' படத்தில் 'கூடுவிட்டு கூடு' என்கிற பாடலை ஜோதி நூரனுடன் இணைந்து பாடியுள்ளார். ஆனால் இந்த பாடல் பெரிதாக வரவேற்பை பெற்றவில்லை.
44
Actor Prashanth
மேலும் நடிகர் பிரஷாந்த் கூட தன்னுடைய படத்தில் ஒரே ஒரு பாடலை பாடியுள்ளார். இயக்குனர் சரண் இயக்கத்தில், 2000-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் 'வா என்றது' என்கிற இன்ட்ரோ பாடலை தான் பிரஷாந்த் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.