ராம் சரணுக்கு பிடித்த நடிகை இவங்க தானாம்! ஆலியா பட், ஜான்வி கபூர் இல்ல..

Published : Aug 24, 2024, 11:06 AM IST

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராம் சரண் தனக்கு பிடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படங்கள் எவை என்பதை பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும் ஜப்பான் ரசிகை ஒருவர் தனக்காக வரைந்த ஓவியம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

PREV
17
ராம் சரணுக்கு பிடித்த நடிகை இவங்க தானாம்! ஆலியா பட், ஜான்வி கபூர் இல்ல..
Ram Charan

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், தொழில் முனைவோர் என பன்முக திறமை கொண்ட அவர் கடைசியாக RRR படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. 

27
Ram Charan

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராம் சரண் தனக்கு பிடித்த நடிகர், நடிகைகள் பற்றி பேசினார். திரைத்துறையில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை ராம் சரண் வெளிப்படுத்தினார்.

37
Ram charan

இதுகுறித்து பேசிய அவர் “ “எனக்கு சூர்யாவை பிடிக்கும்” என்று கூறினார். பின்னர் தனக்கு பிடித்த நடிகை பற்றி கேட்ட போது “ எனக்கு சமந்தாவை பிடிக்கும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “ எனக்கு ரொமான்ஸ், காமெடி படங்களை விட த்ரில்லர் படங்கள் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

47
Ram Charan

தான் நடித்த படங்களிலேயே, மகதீரா படம் தான் தனக்கு பிடித்த படம் என்று கூறிய ராம் சரண், அது தான் தனது மைல்கல் படம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் RRR-ன் விளம்பரத்திற்காக ஜப்பான் சென்றிருந்தபோது, ​​தனக்கும் அவரது படங்களுக்கும் மிகவும் ரசிகராக இருந்த ஒரு வயதான பெண்ணை சந்தித்ததாக ராம் சரண் பகிர்ந்து கொண்டார்.

57
Ram Charan

இதுகுறித்து பேசிய அவர்  “அவரிடம் 180 பக்க கலைப் புத்தகம் இருந்தது, நான் நடித்த படங்கள் மற்றும் பாடல்களிலிருந்தும் எனது ஒவ்வொரு வெளிப்பாடுகளையும் அவர் தனது கையால் வரைந்திருந்தார். என்னை ஜப்பானுக்கு அழைத்து சென்ற அந்த வயதான பெண்ணை சந்திக்க வைத்த RRR குழுவிற்கு நன்றி தெரிவித்தேன்.

பழைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் எனக்கு ரசிகராக இருப்பது வித்தியாசமான உணர்வு” என்று ராம்சரண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

67
Ram Charan

இதற்கிடையில், ராம் சரண் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

 

77
Ram Charan

கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை பற்றிய படம் என்று கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories