பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு இன்னும் இரு வாரங்களே உள்ளதால், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளன. அதன்படி தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் இருந்து புரமோஷனை தொடங்க உள்ளார்களாம்.
இதற்கு அழைப்பு விடுக்கும் விதமாக, ஆதித்த கரிகாலனாக மாறி நடிகர் விக்ரம் போட்ட டுவிட்டில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டுத்திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா என பதிவிட்டு கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி ஆகியோரை டேக் செய்திருந்தார் விக்ரம்.
இதையும் படியுங்கள்... Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!
இதற்கு வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி அளித்துள்ள ரிப்ளை தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன வந்தியத்தேவன் இங்கிலீஸெல்லாம் பேசுராரு என கிண்டலடித்து வருகின்றனர்.
இவ்வாறு பொன்னியின் செல்வன் புரமோஷனுக்காக புதுவிதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர். முன்னதாக நடிகை திரிஷா தனது பெயரை டுவிட்டரில் குந்தவை என்றும், நடிகர் விக்ரம் தனது பெயரை ஆதித்த கரிகாலன் என்றும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு