நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் 13 வயதில் சினிமாவில் கால்பதித்தவர் நடிகை லீனா ஆண்டனி. அன்று தொடங்கிய அவரது திரைப்பயணம் தற்போது 60 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. இவரது கணவர் ஆண்டனியும் சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார்.
நடிகை லீனா ஆண்டனி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜோ அண்ட் ஜோ, மகள், மகேஷிண்டே பரிகாரம் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் ஆவார். இவர் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டதால், அந்த சமயத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் 57 ஆண்டுகளுக்கு முன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு படிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... என் அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க தேவையில்ல.. நானே பார்த்துப்பேன்.. மாஸ் காட்டிய ராகவா லாரன்ஸ்.
ஆனால் இவருக்கு எப்படியாவது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற ஆசை பல வருடங்களாக இருந்து வந்துள்ளது. அந்த ஆசை விரைவில் நிறைவேறிவிடும் என்கிறார் நடிகை லீனா ஆண்டனி. அவர் கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். 73 வயதாகும் அவர் பொதுத்தேர்வு எழுதியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
இதுகுறித்து லீனா கூறியதாவது : “சினிமாவில் டயலாக்குகளை மனப்பாடம் செய்து பேசுவேன். அதைப்போலவே தற்போது மனப்பாடம் செய்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். நிச்சயம் பாஸ் ஆகி விடுவேன் என்கிற நம்பிக்கையும் உள்ளது” என கூறியுள்ளார். தேர்வுக்கு பயந்து இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்ளும் தற்போதைய காலகட்டத்தில், 73 வயதாகும் லீனா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு