MAAMANNAN
பிரபல இயக்குனர் ராம் அவர்களின் உதவி இயக்குனராக இருந்தவர் மாரி செல்வராஜ். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பரியேறும் பெருமாள் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். ஆனால் தனது ஆசான் ராமின் பாதையை பின்பற்றாமல் இவர் தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டார். அதன்படி சமூகம் சார்ந்த கதைகளத்தை கையில் எடுத்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் அடுத்ததாக கர்ணன் என மிகப் பெரிய ஹிட் படங்கள் இரண்டினை படைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...40 களை கடந்தும் கட்டுக்கடங்காத கவர்ச்சி..கண்களை கூச வைக்கும் கிரண்
இரண்டு படங்களாயினும் இரண்டுமே பேசும் படங்களாக மாறியது. பரியேறும் பெருமாளும், கர்ணனும் பல விருதுகளை குவித்தது. தற்போது இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், பிரபல நடிகர் விக்ரமின் மகனான துரு விக்ரமின் 4 வது படம் உருவாகி வருகிறது.
MAAMANNAN
உதயநிதி ஸ்டாலின் இறுதியாக நெஞ்சுக்கு நீதி படத் நடித்ததை அடுத்து தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு கழகத் தலைவன் என்கிற படத்தையும் தன் கையில் வைத்துள்ளார். எம்.எல்.ஏ ஆனபிறகு உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. தற்சமயம் சமூகத்தின் மிகப் பெரிய இன்னலாக இருக்கக்கூடிய பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு அந்த படம் உருவாகியிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...‘வாரிசு’ 100-வது நாள் ஷூட்டிங் ஸ்பெஷல்... ஸ்டைலிஷ் விஜய்யுடன் ஸ்மைலிங் ராஷ்மிகா எடுத்த கியூட் செல்பி வைரல்
MAAMANNAN
முன்னதாக வடிவேலுவின் 62 வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து உதயநிதி ஸ்டாலின் வடிவேலு உள்ளிட்டோர் கேக் வெட்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார் மாமன்னன் நாயகன் உதயநிதி.