Published : Sep 14, 2022, 12:38 PM ISTUpdated : Sep 14, 2022, 04:22 PM IST
ரவீந்தரிடம் இது தான் தனக்கு பிரச்சனை என மஹாலட்சுமி கூறியுள்ள விஷயத்திற்காக தான், ரவீந்தரின் முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக ரவீந்தர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழில் வெளியான சில தரமான படங்களை தன்னுடைய, லிப்ரா நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளவர் ரவீந்தர் சந்திரசேகரன். கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் சில பிரச்சனைகளில் வாண்டடாக வாயை விட்டு சிக்கி கொள்ளும் பிரபலங்களில் இவரும் ஒருவர்.
27
இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், கடந்த வாரம்... பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான மஹாலட்சுமினியை சுமார் ஒன்றரை வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, திருப்பதியில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டது.
இவர்கள் திருமண புகைப்படம் வெளியானபோது கூட பல இது மூவி ப்ரமோஷனாக தான் இருக்கும் என நினைத்தனர். பின்னர் தான் இது உண்மையாகவே பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் என தெரிவியவந்தது. திருமணம் ஆகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும், இவர்களை பற்றிய தகவல் தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
47
திருமணம் முடிந்த கையேடு, குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம், தனி விமானத்தில் ஹனி மூன் கொண்டாட சென்றது, என புது திருமண உறவை இருவரும் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில், ரவீந்தர் மனைவி, ஏன் அவரை விவாகரத்து செய்தார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவரே, தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ள ரவீந்தர்... நான் ஒரு தயாரிப்பாளர் என்பது அவருக்கு பிடிக்கவில்லை என்பதால், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தன்னை விட்டு, விவாகரத்து பெற்று சென்றதாக தெரிவித்துள்ளார்.
67
அதே போல் மகாலட்சுமியும் சமீபத்தில் கொடுத்த போட்டியில், ரவீந்தரிடம் தனக்கு பிரச்சனையாக இருப்பது அவர் ஒரு தயாரிப்பாளர் என்பது தான், காரணம் அவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் தான் இந்த திருமண செய்தியை பலர் விமர்சித்து பெரிய விஷயமாக பேசுகிறார்கள் என தெரிவித்திருந்தார். மேலும் அவர் ஒரு தயாரிப்பாளராக இல்லை என்றால் இந்த விஷயத்தை யாரும் இவ்வளவு பெரிது படுத்தி இருக்கமாட்டார்கள் என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களை சுற்றி வரும், பல்வேறு விமர்சனங்களுக்கு தொடர்ந்து பேட்டி மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிலடி கொடுத்து வரும் தம்பதி, அனைவருக்கும் வாழ்ந்து பதிலடி கொடுக்க வேண்டும் என இவர்களின் ஆதரவாரகள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.