இந்நிலையில், அந்த வதந்திக்கெல்லாம் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அவர் தனது திருமணத்தின் போது நடிகை நயன்தாராவின் அம்மா ஓமனா குரியனை பாசத்துடன் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார்.
அந்த பதிவில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளதாவது : “அன்புள்ள ஓமனா குரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னுடைய இன்னொரு அம்மா. நான் எப்போது நேசிக்கும் பெண் அவர். அழகிய மனதுடையவர். அவர்களுக்கு நல்ல ஆரோக்யம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆசிர்வாதத்தை வழங்குமாறு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... டுவிட்டரில் ‘ஆதித்த கரிகாலன்’ விக்ரம் உடன் சேர்ந்து ‘குந்தவை’ திரிஷா செய்த வேலையை பார்த்தீர்களா...!