தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் வளர்ந்து நின்றவர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான 'வாத்தி' படத்திற்கும் தொடர்ந்து, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
Dhanush
மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் 'கேப்டன் மில்லர்' என்கிற படத்திலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் கடந்த இரண்டு வருடங்களாக கட்டி வரும், வீட்டின் கிரகப்ரவேசம் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த வீட்டில் தனுஷ் என்னென்ன வசதிகளுடன் காட்டியுள்ளார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் இந்த இடத்தில், தனுஷ் தன்னுடைய மகன் மனைவியுடன் குடியேற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வீடு கட்டுவதற்கான பூமி பூஜையும் 2021 ஆம் ஆண்டு போடப்பட்டது. இதில் நடிகர் தனுஷின் குடும்பத்தினர், ரஜினிகாந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு, வெளிநாட்டை சேர்ந்த இன்ஜினியர்களை கொண்டு... தனுஷ் இந்த வீட்டை ஹைடெக் மாடலிலும் கட்ட முடிவு செய்தார். 4 தளம் கொண்ட இந்த வீட்டை, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான வகையில் தனுஷ் டிசைன் செய்துள்ளார்.
மனைவி, மகன்களுடன் தனுஷ் இந்த வீட்டில் குடியேறுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், மனைவியுடனான விவாகரத்து தனுஷின் வாழ்க்கையையே திருப்பி போட்டது. எனவே பல கோடி செலவு செய்து கட்டிய வீட்டில், பெற்றோரை குடியேற்று அழகு பார்த்துள்ளார் தனுஷ். இதுவரை வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகாத நிலையில், கிரகப்ரவேச புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தனுஷுக்கு தெரிவித்து வருகிறார்கள்.