நடிகர் தனுஷ் ரசிகர்கள் மீது தீராத அன்பு வைத்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்ததும் நெகிழ்ந்து போன தனுஷ், உங்களுக்காக நான் என்ன செய்யப்போகிறேனோ என மேடையில் எமோஷனலாக பேசி இருந்தார்.
நடிகர் தனுஷ் சென்னையின் ரிச் ஏரியா என சொல்லப்படும் போயஸ் கார்டனில் புதிதாக பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி உள்ளார். இந்த ஏரியாவில் ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, இயக்குனர் அட்லீ ஆகியோர் சொந்தமாக வீடு வைத்திருக்கும் நிலையில், நடிகர் தனுஷும் தற்போது அந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த அந்த வீட்டின் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து கிரஹபிரவேசம் நடத்தி அந்த வீட்டில் குடியேறி உள்ளார் தனுஷ்.
அந்த புது வீட்டில் குடியேறியதும் நடிகர் தனுஷ், தனது ரசிகர்களை அவர்களது குடும்பத்தினருடன் வர வைத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு, தடபுடலாக விருந்தும் வைத்துள்ளார். இறுதியாக அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார் தனுஷ். அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வரும் ரசிகர்கள், இப்படிப்பட்ட ஒரு நடிகருக்கு ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.