மயில்சாமியின் மகன்கள் இத்தனை தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்களா? - பலரும் அறிந்திடாத தகவல்

Published : Feb 20, 2023, 02:40 PM IST

மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் நடித்துள்ள படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
மயில்சாமியின் மகன்கள் இத்தனை தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்களா? - பலரும் அறிந்திடாத தகவல்

மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தது தமிழ் திரையுலகையே மாபெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. 57 வயதில் அவர் மரணமடைந்ததால், இனி அவரைப் போல் அவரது மகன்கள் சினிமாவில் சாதிக்க வேண்டும் என தான் இறைவனை வேண்டிக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரைப் பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

26

மயில்சாமியின் மூத்த மகன் பெயர் அருமைநாயகம். அவர் சினிமாவில் நடிக்க வந்த பின்னர் தனது பெயரை அன்பு என மாற்றிக் கொண்டார். சினிமாவில் காமெடியனாக கலக்கிய மயில்சாமி தன் மகன் அன்புவை ஹீரோவாக்கி அழகுபார்க்க ஆசைப்பட்டு, கோரிப்பாளையம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற குடும்ப பாங்கான படங்களை இயக்கிய ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடிக்க வைத்தார்.

36

பார்த்தோம் பழகினோம் என்கிற தலைப்புடன் தொடங்கப்பட்ட அப்படம் ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களிலேயே கிடப்பில் போடப்பட்டது. முதல் படமே இப்படி ஆனதால் அப்செட் ஆன அன்பு, சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் அந்த 60 நாட்கள் என்கிற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார் அன்பு. முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவான இப்படம் இன்றுவரை ரிலீசாகவில்லை.

இதையும் படியுங்கள்... எம்ஜிஆர் வழியில் மயில்சாமி; நகைகளை அடமானம் வைத்து உதவி செய்து வாழ்ந்த மனிதர்!

46

பின்னர் 2015-ம் ஆண்டே கொக்கு என்கிற திரைப்படத்திலும் நடித்தார் அன்பு மயில்சாமி. ஜான்சன் இயக்கிய இப்படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்படி தான் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாவிட்டாலும், நம்பிக்கையை கைவிடாத அன்பு தொடர்ந்து முயற்சித்து வந்தார். அதன்படி 2017-ம் ஆண்டு ஒரு பொம்மலாட்டம் நடக்குது, திரிபுரம் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களும் கிடப்பில் போடப்பட்டன.

56

இதையடுத்து 9 வருட போராட்டத்துக்கு பின்னர் தான் அன்பு மயில்சாமி ஹீரோவாக நடித்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதுவும் தியேட்டரில் ரிலீசாகவில்லை, நேரடியாக ஓடிடியில் தான் வெளியானது. கடந்த 2020-ம் ஆண்டு வெளிவந்த அல்டி என்கிற திரைப்படம் தான் அன்பு மயில்சாமியின் முதல் படமாக அமைந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன சிதம்பரம் இரயில்வே கேட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அன்பு மயில்சாமி.

66

மறுபுறம் மயில்சாமியின் இளையமகன் யுவனும் சினிமாவில் நாயகனாக வேண்டும் என்கிற கனவோடு தான் இருந்து வருகிறார். இவர் முதன்முதலில் நாயகனாக நடித்த திரைப்படம் என்று தணியும். இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி தோல்வியடைந்தது. இதையடுத்து சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த யுவன் தற்போது, பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் தண்டகாரண்யம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மயில்சாமிக்கு மகன்கள் சினிமாவில் ஹீரோவாக சாதிப்பதை பார்க்க வேண்டும் என்கிற ஆசையோடு இருந்து வந்தாராம். அவரின் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய் உள்ளது. 

இதையும் படியுங்கள்... Mayilsamy: “ஆண்டவனின் கணக்கு.. மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” - நடிகர் ரஜினிகாந்த் உறுதி

click me!

Recommended Stories