அஜித்தை அடிக்க பிரபல ஹீரோவை வில்லனாக களமிறக்கும் மகிழ் திருமேனி... ஏகே 62-வில் காத்திருக்கும் தரமான சம்பவம்

Published : Feb 20, 2023, 01:22 PM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நாயகனாக நடிக்கும் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
அஜித்தை அடிக்க பிரபல ஹீரோவை வில்லனாக களமிறக்கும் மகிழ் திருமேனி... ஏகே 62-வில் காத்திருக்கும் தரமான சம்பவம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்தது. எச் வினோத் இயக்கியிருந்த இப்படம் வங்கியில் நடக்கும் நூதன மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

24

இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொக்கேன், அமீர், பாவணி, ஜி எம் சுந்தர், மோகனசுந்தரம், தர்ஷன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. ரசிகர்களின் சமூக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிகுவித்து சாதனை படைத்தது. துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. 

இதையும் படியுங்கள்... சூப்பர்ஹீரோவாக மாறிய ஹிப்ஹாப் ஆதி... வெளியானது வீரன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக்

34

ஷூட்டிங் தொடங்க இருந்த நிலையில் அப்படத்தின் கதை பிடிக்காததால் அதில் இருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம். இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி அப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவது உறுதியான போதிலும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அறிவிப்பு வெளியாக விட்டாலும் அப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை முழுவீச்சில் நடந்து வருகின்றன.

44

அந்த வகையில் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் தான் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய தடம், தடையறத் தாக்க போன்ற படங்களிலும் அருண் விஜய் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வசூல் வேட்டையாடும் வாத்தி... மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா..! தனுஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories