சூப்பர்ஹீரோவாக மாறிய ஹிப்ஹாப் ஆதி... வெளியானது வீரன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக்

Published : Feb 20, 2023, 12:26 PM IST

ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் நாயகனாக நடித்து வரும் வீரன் என்கிற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. 

PREV
14
சூப்பர்ஹீரோவாக மாறிய ஹிப்ஹாப் ஆதி... வெளியானது வீரன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக்

தமிழ் திரையுலகில் விஷால் நடித்த ஆம்பள படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதையடுத்து தனி ஒருவன், அரண்மனை 2, இன்று நேற்று நாளை, கதகளி என ஏராளமான வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் சுந்தர் சி தயாரித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இப்படத்தையும் அவரே இயக்கி இசையமைத்து இருந்தார்.

24

தனது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மீசைய முறுக்கு திரைப்படத்தை எடுத்திருந்த ஹிப்ஹாப் ஆதி முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். இதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தாள், அன்பறிவு என அடுத்தடுத்து நாயகனாக நடித்து வெற்றிகண்ட ஹிப்ஹாப் ஆதி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்...வசூல் வேட்டையாடும் வாத்தி... மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா..! தனுஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

34

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் நாயகனாக நடித்து வரும் வீரன் என்கிற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் சூப்பர்ஹீரோ கெட் அப்பில் செம்ம மாஸாக இருக்கும் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புகைப்படத்துடன் கூடிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.

44

வீரன் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே மரகத நாணயம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் ஆவார். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் தயாராகி வரும் இப்படத்திற்காக கடினமாக உழைத்துள்ளதாக ஆதி தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகிய ரசிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories