தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் வாத்தி. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்திருந்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகி உள்ளது. தெலுங்கில் இப்படம் சார் என்கிற பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் சித்தாரா நிறுவனம் தயாரித்து உள்ளது.
அதன்படி வாத்தி திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.43 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த அசுரன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் மட்டுமே ரூ.100 கோடி வசூல் என்கிற மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளன. அந்த பட்டியலில் வாத்தியும் இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.