நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று காலமானார். சென்னையில் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் விடிய விடிய வந்த அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து ரஜினி பேசியதாவது : “மயில்சாமி என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் தீவிர எம்.ஜி.ஆர். பக்தர், அதோடு தீவிர சிவபக்தர். வருடந்தோறும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்லும் போதெல்லாம் எனக்கு போன் போடுவார் மயில்சாமி. கடந்த ஆண்டும் எனக்கு போன் செய்துள்ளார். நான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் எடுக்க முடியவில்லை. மூன்று முறை எனக்கு போன் செய்திருந்தார். திரும்ப அவரிடம் பேச முடியாமலேயே போய்விட்டது.
சிவராத்திரி அன்று அவர் மரணமடைந்து இருப்பது தற்செயலாக நடந்தது கிடையாது. எல்லாம் ஆண்டவனுடைய கணக்கு. தன்னுடய தீவிர பக்தனை தன்னுடைய உகந்த நாள்ல சிவன் கூட்டிச் சென்றுவிட்டார். விவேக் மற்றும் மயில்சாமியின் இழப்பு சினிமாவுக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் மிகப்பெரிய பேரிழப்பு. இருவருமே நல்ல சிந்தனைவாதிகள் மற்றும் சமூக அக்கறை உள்ளவர்கள். மயில்சாமியின் வாரிசுகள் சினிமாவில் நல்ல இடத்தை அடைய அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என கூறினார் ரஜினி.
இதையும் படியுங்கள்... விண்ணதிரும் சிவ வாத்தியங்களுடன் இறுதிச்சடங்கு... மயில்சாமி உடலுக்கு பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை அணிவிப்பு
நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை சிவராத்திரி பூஜையில் பங்கேற்றபோது, ரஜினிகாந்தை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு அழைத்து வந்து அங்குள்ள லிங்கத்திற்கு பாலாப்ஷேகம் செய்ய வைக்க வேண்டும் அது தனது நீண்ட நாள் ஆசை என டிரம்ஸ் சிவமணியிடம் கூறி இருந்தாராம்.
இதுகுறித்து இன்று அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்திடமும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினி, “நானும் அதைக் கேள்விப்பட்டேன். அந்த சிவன் கோவில் நிர்வாகிகளிடம் பேசுகிறேன். அது அவரது கடைசி ஆசை என்பதால் நிச்சயம் அதனை நான் நிறைவேற்றுவேன்” என கூறிவிட்டு சென்றார் ரஜினி.
இதையும் படியுங்கள்... Mayilsamy : கடைசி வரை நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை... இதை பார்க்காமலே இறந்துட்டாரே..!