விண்ணதிரும் சிவ வாத்தியங்களுடன் இறுதிச்சடங்கு... மயில்சாமி உடலுக்கு பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை அணிவிப்பு

First Published | Feb 20, 2023, 8:28 AM IST

அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலையை அணிவித்து மயில்சாமியின் உடலுக்கு குருக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். மயில்சாமியின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மயில்சாமியின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நடிகர் மயில்சாமி தீவிரமான சிவ பக்தர் என்பதால் விண்ணதிரும் சிவ வாத்தியங்களுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... Mayilsamy : கடைசி வரை நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை... இதை பார்க்காமலே இறந்துட்டாரே..!

Tap to resize

மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து மரியாதை செலுத்தினர். அதேபோல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் குருக்கள் இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலையை அவர்கள் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அணிவித்தனர்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி, நேற்று அதிகாலை சிவராத்திரி சிறப்பு பூஜையில் பங்கேற்று வீடு திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மயில்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மயில்சாமி தமிழ் திரையுலகில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சிவராத்திரி பூஜையில் பங்கேற்பு - மயில்சாமி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி வீடியோ

Latest Videos

click me!