திடீரென நிகழ்ந்த மரணம்... காஷ்மீரில் நடந்து வந்த லியோ படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்...!

Published : Feb 20, 2023, 07:30 AM IST

திடீரென நிகழ்ந்த மரணத்தால் காஷ்மீரில் நடைபெற்று வந்த லோகேஷ் கனகராஜின் லியோ படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
திடீரென நிகழ்ந்த மரணம்... காஷ்மீரில் நடந்து வந்த லியோ படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்...!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த மாத இறுதியில் படக்குழுவினர் அனைவரும் தனிவிமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அங்கு ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லியோ பட ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

24

லியோ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் மனோஜ் பரமஹம்சா. நடிகர் விஜய்யுடன் நண்பன், பீஸ்ட் போன்ற படங்களில் பணியாற்றி வந்த மனோஜ் பரமஹம்சா, தற்போது லியோ படம் மூலம் மூன்றாவது முறையாக தளபதி உடன் கூட்டணி அமைத்துள்ளார். காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டதற்கு மனோஜ் பரமஹம்சா தான் காரணம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகிய ரசிகர்கள்!

34

ஏனெனில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததன் காரணமாக அவர் சென்னை திரும்பியதால், லியோ படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்ததும் மனோஜ் பரமஹம்சா மீண்டும் காஷ்மீருக்கு திரும்பிச் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

44

மனோஜ் பரமஹம்சா, ஒளிப்பதிவாளர் எஸ் சரவணனிடம் பம்மல் கே சம்பந்தம், பிரியமான தோழி, மதுர, திருப்பாச்சி, திருப்பதி போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றி இருந்தார். இதையடுத்து ஷங்கர் தயாரித்த ஈரம் திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான மனோஜ் பரமஹம்சா, பின்னர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா, ஷங்கர் இயக்கிய நண்பன் போன்ற படங்களின் மூலம் முன்னணி ஒளிப்பதிவாளராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அன்பான மனைவி... சினிமாவில் ஹீரோவாக வலம்வரும் மகன்கள் - யாரும் பார்த்திராத நடிகர் மயில்சாமியின் பேமிலி போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories