4 மாசத்துல 3 ஹிட்; பாக்ஸ் ஆபிஸில் ரூ.850 கோடி வசூல் அள்ளிய இந்த லக்கி ஹீரோயின் யார்?
நான்கு மாதங்களில் மூன்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.850 கோடி வசூலை வாரிக்குவித்துள்ள லக்கி ஹீரோயின் பற்றி பார்க்கலாம்.
நான்கு மாதங்களில் மூன்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.850 கோடி வசூலை வாரிக்குவித்துள்ள லக்கி ஹீரோயின் பற்றி பார்க்கலாம்.
பாக்ஸ் ஆபிஸ் வெற்றி ஹீரோக்களுக்கு தான் பெரும் உதவியாக இருக்கும். ஒரு படம் வெற்றியடைந்தாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி அதன் ரிசல்ட் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துவது ஹீரோக்கள் மீது தான். அதே வேளையில், ஹீரோயின்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தாலும் அவர் அதிகம் கொண்டாடப்படுவதில்லை. அப்படி தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் ஒரு ஹீரோயின் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
இந்த நடிகை கடந்த நான்கு மாதங்களில் மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதுவும் ஒரு மொழியில் அல்ல மூன்று வெவ்வேறு மொழிகளில். இந்த மூன்று படங்களுமே பண்டிகை தினங்களில் தான் ரிலீஸ் ஆனது. அதில் ஒரு படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆனது. மற்றொரு திரைப்படம் தீபாவளிக்கு, மூன்றாவது வெற்றிப்படம் பொங்கல் பண்டிகைக்கும் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... மாடல் அழகி.. பல் மருத்துவர்.. இன்னும் பல திறமைகள் - யம்மாடியோ என வியக்க வைக்கும் தளபதியின் நாயகி!
அந்த நடிகை வேறுயாருமில்லை மீனாட்சி செளத்ரி தான். இவர் கடந்த நான்கு மாதங்களில் மூன்று வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதில் அவருக்கு முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி செளத்ரி. இப்படம் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆனது.
அடுத்ததாக மீனாட்சியின் ஹிட் லிஸ்டில் இணைந்த படம் லக்கி பாஸ்கர். கடந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆன இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி செளத்ரி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
பின்னர் தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் மீனாட்சி செளத்ரி நடித்த படம் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’. இப்படத்தில் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி. இப்படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார். இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படி நான்கு மாதங்களில் 3 பிளாக்பஸ்டர் ஹிட் படம் மூலம் ரூ.850 கோடிக்கு மேல் வசூலித்து லக்கி சார்ம் ஆக வலம் வருகிறார் மீனாட்சி செளத்ரி.
இதையும் படியுங்கள்... Meenakshi Chaudhary : மாடர்ன் உடையில்.. சொக்கவைக்கும் போஸில் GOATன் நாயகி மீனாட்சி சவுத்ரி - ஹாட் கிளிக்ஸ்!