வசூல் வேட்டையை ஆரம்பித்த விடாமுயற்சி! முன்பதிவிலேயே இத்தனை கோடி கலெக்ஷனா?
அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி உள்ள நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி உள்ள நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
அஜித்குமாரின் 62வது படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்த திரிஷா, இப்படத்திலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் அஜித்துடன் ஆரவ், அர்ஜுன், ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் பிப்ரவரி 6ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் விடாமுயற்சி படத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய SKவின் பராசக்தி!
விடாமுயற்சி திரைப்படத்திற்கான முன்பதிவு தமிழ்நாட்டில் நேற்று தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால், அப்படத்திற்கான காட்சிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இப்படத்தை பிப்ரவரி 6ந் தேதி தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரையரங்குகளில ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கு முன்னர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் தான் தமிழகத்தில் ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அந்த சாதனையை விடாமுயற்சி படம் முறியடிக்க உள்ளது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முன்பதிவு மூலம் மட்டும் இப்படம் ரூ.2.69 கோடி வசூலித்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இப்படம் ப்ரீ புக்கிங் மூலம் ரூ.3.5 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறதாம். இன்னும் நான்கு நாட்கள் எஞ்சி உள்ளதால், இப்படம் முன்பதிவிலேயே ரூ.25 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித்தின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படமாகவும் விடாமுயற்சி இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்.... வரி கரெக்டா கட்ட வேண்டும் என்று அஜித் அடிக்கடி சொல்வார் – நடிகர் ஆரவ்!