60 வயதில் 3வது திருமணமா? அமீர்கானின் காதல் வலையில் சிக்கியது யார் தெரியுமா?

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகின்றன.

Aamir Khan fall in love again his third Marriage Rumors Sparks gan
அமீர்கானின் அடுத்த திருமணம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் கடந்த 1986-ம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஜுனைத் கான் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜுனைத் கான் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல் அமீர்கான் மகள் ஐராவுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. நடிகர் அமீர்கான் தன்னுடைய முதல் மனைவி ரீனா தத்தாவை கடந்த 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

Aamir Khan fall in love again his third Marriage Rumors Sparks gan
2 முறை விவாகரத்து பெற்ற அமீர்கான்

ரீனா உடனான பிரிவுக்கு பின்னர் கிரண் ராவ் என்பவரை கரம்பிடித்தார் அமீர்கான். இந்த ஜோடிக்கு ஆசாத் என்கிற மகன் இருக்கிறார். அமீர்கான் இந்த திருமணமும் விவாகரத்தில் தான் முடிந்தது. கடந்த 2021-ம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் அமீர்கான். இரண்டு முறை விவாகரத்து பெற்ற பின்னர் சிங்கிளாக வாழ்ந்து வந்த அமீர்கான் தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்...  கைமாறும் இரும்புக்கை மாயாவி; சூர்யாவை Replace செய்யப்போவது யார் தெரியுமா?


அமீர்கானின் 3வது திருமணம் யாரோடு?

இம்முறை பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவரை அமீர்கான் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் அமீர்கான் தரப்பு இதுகுறித்து வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் 60 வயதில் மூன்றாவது திருமணமா என வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் என கமெண்ட் அடித்தும் வருகிறார்கள்.

அமீர்கானின் அடுத்த படம்

கெரியரை பொறுத்தவரை அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அமீர்கான் தற்போது ‘சித்தாரே சமீன் பர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது 'தாரே சமீன் பர்' படத்தின் இரண்டாம் பாகமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. ஆர்.எஸ்.பிரசன்னா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தன்னுடைய கெரியரில் சிறந்த படமாக இருக்கும் என அமீர்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... விஜய் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அமீர்கான்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Latest Videos

click me!