அஜித்தின் விடாமுயற்சி பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய SKவின் பராசக்தி!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் டீசர், விடாமுயற்சி பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் டீசர், விடாமுயற்சி பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ள சமயத்தில் அடுத்த தளபதியாக உருவெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். கோட் படத்தின் மூலம் விஜய்யே தன்னுடைய இடத்துக்கு சிவா தான் சரியான ஆள் என்பதை சூசகமாக சொல்லிவிட்டார். இதை உறுதி செய்யும் விதமாக ஒரே படத்தின் மூலம் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உயர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக கோலிவுட்டில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அஜித் தான். அவர்கூட இதுவரை ஒரு படத்தில் கூட 350 கோடி வசூலை எட்டியதில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் தன்னுடைய 22-வது படத்திலேயே அந்த இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தி கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உருவெடுத்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, தற்போது தன்னுடைய பராசக்தி படத்தின் டீசர் மூலம் அஜித்தின் விடாமுயற்சி பட ரெக்கார்டை சுக்குநூறாக நொறுக்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... வரி கரெக்டா கட்ட வேண்டும் என்று அஜித் அடிக்கடி சொல்வார் – நடிகர் ஆரவ்!
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. அந்த டீசர் வெளியாகி 2 மாதங்களுக்கு மேல் ஆன போதிலும் இதுவரை யூடியூப்பில் 1.4 கோடி பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் டீசர் வெளியாகி 3 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், அது யூடியூப்பில் 2 கோடிக்கு மேல் பார்வைகளை பெற்று மாஸ் காட்டி உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அஜித்தை விட சிவகார்த்திகேயன் படத்திற்கு இம்புட்டு மவுசா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
விடாமுயற்சி டீசர் மட்டுமல்ல, இரண்டு வாரங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்ட அப்படத்தின் டிரைலரும் இதுவரை 1.7 கோடி பார்வைகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இப்படி அஜித் பட சாதனையை சிவகார்த்திகேயன் அசால்டாக முறியடித்துள்ளதால், பராசக்தி படம் பாக்ஸ் ஆபிஸிலும் சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மொழிப்போர் தியாகி இராசேந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பராசக்தி தலைப்பு யாருக்கும் கிடையாது; தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் வந்த புது சிக்கல்!