சிம்பு பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நயன்தாரா; அடடே இதுதான் விஷயமா?

நடிகை நயன்தாரா, வருகிற பிப்ரவரி 3ந் தேதி சிம்புவின் பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

Nayanthara Reveals Exciting Announcement on Simbu Birthday gan
நயன்தாராவின் அடுத்த அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு தற்போது வயது 40ஐ நெருங்கிவிட்ட போதிலும் சினிமாவில் நம்பர் 1 நாயகியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா அளவில் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. அதன்படி ட்யூடு விக்கி இயக்கியுள்ள மண்ணாங்கட்டி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்கிற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடிக்கிறார்.

Nayanthara Reveals Exciting Announcement on Simbu Birthday gan
40 வயதிலும் நயன்தாரா செம பிஸி

இதுதவிர யாஷ் நடிக்கும் பான் இந்தியா திரைப்படமான டாக்ஸிக் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன். இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் யாஷின் அக்காவாக நடிக்கிறார் நயன்தாரா. இதுதவிர நடிகை நயன்தாரா கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் டெஸ்ட். இப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் நயன்தாரா உடன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... ரூ.100 கோடி செலவில் நயன்தாரா கட்டிய வீட்டை பார்த்திருக்கிறீர்களா?


ஓடிடியில் நயன்தாரா படம்

இந்த நிலையில், நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பிப்ரவரி 3ந் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக குறிப்பிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நெட்பிளிக்ஸில் அடுத்தது என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே நெட்பிளிக்ஸில் கடந்த ஆண்டு வெளியான நயன்தாராவின் திருமண ஆவணப்படமே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், மீண்டும் நெட்பிளிக்ஸில் என்ன அறிவிப்பை வெளியிடப்போகிறார் நயன்தாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

நெட்பிளிக்ஸில் ரிலீசாகும் டெஸ்ட்

மேலும் பிப்ரவரி 3ந் தேதி நடிகை நயன்தாராவின் முன்னாள் காதலனான சிம்புவின் பிறந்தநாள் என்பதால் அது என்ன அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். நயன்தாரா நாளை வெளியிட உள்ள அந்த அறிவிப்பு என்னவென்றால், அவர் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் நாளை வெளியாக உள்ளது. அதைத்தான் நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா பதிவில் சூசகமாக குறிப்பிட்டு இருக்கிறார். 

இதையும் படியுங்கள்...   நயன்தாரா முதல் அனுஷ்கா வரை டாப் ஹீரோயின்ஸ் No மேக்கப் லுக்!

Latest Videos

click me!