ஹீரோவாக ஆசைப்பட்ட பிரபு தேவா மகன்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே மனுஷன்?
பிரபு தேவா மகனுக்கு இப்போது ஹீரோவாகும் ஆசை வந்துள்ள நிலையில், மகனிடம் இவர் சொன்ன விஷயம் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரபு தேவா மகனுக்கு இப்போது ஹீரோவாகும் ஆசை வந்துள்ள நிலையில், மகனிடம் இவர் சொன்ன விஷயம் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடன இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட இயக்குநர் என்று பன்முக கலைஞராக இருக்கும் பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 30 ஆண்டுகால சினிமாவின் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். நடிகர் என்பதை தாண்டி இயக்குனராக பாலிவுட் திரையுலகில் இவருக்கான இடம் மிகவும் பெரிது.
தனது அசாத்திய நடன அசைவுகளால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். இவரை ரசிகர்கள் சவுத் இந்தியன் மைக்கில் ஜாக்சன் என்றும் அழைப்பது உண்டு. நடன துறையில் தன்னுடைய சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக 2019 ஆம் ஆண்டு பிரபு தேவாவுக்கு பத்ம ஸ்ரீவிருதும் வழங்கப்பட்டது.
12 வருட போராட்டம்; சென்னையில் சொந்த வீடு வாங்கி குடியேறிய விஜய் டிவி சரத்! ரசிகர்கள் வாழ்த்து!
'இந்து' என்கிற படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவாவிற்கு காதலன், மிஸ்டர் ரோமியோ, விஐபி, வானத்தை போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்கள் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். சில வருடங்கள் படம் இயக்க பாலிவுட் பக்கம் சென்ற, பிரபு தேவா... நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் பிசியாகி உள்ளார்.
தற்போது அப்பா பிரபு தேவா போலவே அவருடைய மகனுக்கும் நடிப்பு மீது ஆசை வந்துள்ளதாக பிரபு தேவா அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். ஆம் அவருடைய மகன் பசவாராஜு சுந்தரம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தந்தையிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
2024 தமிழ் சினிமாவுக்கு மோசமான ஆண்டு; இத்தனை கோடி நஷ்டமா? ஷாக்கிங் ரிப்போர்ட்!
அவர் அப்படி சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. என்னுடைய மகனுக்கு சினிமா என்றாலே பிடிக்காது. நான் டான்ஸ் ரிகர்சல் போகும் போது கூட வாடா என்று கூப்பிட்டால் போங்க அப்பா, நீங்க டான்ஸ் ஆடி நான் அதை பார்க்கணுமா என்று சொல்லுவான். அப்படி சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது சினிமாவுல நடிக்க வேண்டும் என்று சொன்னான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் சினிமா ரொம்பவே கஷ்டம். அவனாகவே கஷ்டப்பட்டு கடின உழைப்பின் மூலமாக சினிமாவிற்கு வர வேண்டும் என்று நான் எந்த சிபாரிசும் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார். அப்பாவின் சிபாரிசு இல்லாமல் இப்போது பிரபு தேவா மகன் சினிமாவில் சாதிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.