திறமையால் ஜொலித்த பிரபலங்கள்:
எந்த ஒரு துறையிலும், திறமை மற்றும் முயற்சி இருந்தால் வெற்றிபெறலாம் என்பதற்கு உதாரணமாக பலர் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்... சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து இன்று 300 கோடி வசூல் மன்னனாக மாறியுள்ள சிவகார்த்திகயேன் உள்ளிட்ட பலர் இதற்க்கு மிகப்பெரிய உதாரம்.
KPY சரத்:
அப்படி தான், தன்னுடைய காமெடியை மட்டுமே நம்பி விஜய் டிவி கலக்க போவது நிகழ்ச்சியில் களமிறங்கியவர் KPY சரத். இவர் தீனாவுடன் இணைந்து செய்த காமெடி சேட்டைகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அடுத்தடுத்து ஒரு சில படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார்.
உன்னிகிருஷ்ணன் மகனுக்கு திருமணம்; மணமக்களை வாழ்த்திய வைரமுத்து!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
இன்னும் புகழ், பாலா, தீனா போல் முக்கியமான காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விஜய் டிவி மூலம் தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக இருந்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தன்னுடைய காதலி கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சரத். தற்போது சரத்தின் மனைவியும் சில வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவருமே சேர்ந்து, டிஸ்னி ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பான ஹார்ட் பீட் வெப் தொடரில் நைட்த்திருந்தனர்.
12 வருட போராட்டத்திற்கு பிறகு வீடு வாங்கிய சரத்:
இந்த புகைப்படங்களை சரத் போட்டிருக்கும் பதிவில், "நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி உள்ளது. சென்னையில் வீடு வாங்குவது 12 வருட போராட்டத்திற்கு பிறகு, ஒரு இடத்தை எங்கள் வீடு என்று அழைக்கும் நாள் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி... என்னுடன் உறுதுணையாக இருந்த என் துணைவி கிரித்திகாவுக்கு ரொம்ப ரொம்ப. நன்றி ஐ லவ் யூ மா என தெரிவித்துள்ளார். ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.