இசையமைப்பாளர் இளையராஜா, தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மயக்கும் இசையால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார். இவரை இசை கடவுள் என கொண்டாடும் பல ரசிகர்கள் உள்ளனர். 'அன்னக்கிளி' படத்தில் இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர், இதை தொடர்ந்து மிக குறுகிய காலத்தில் உச்சத்தை அடித்தார். 80-மற்றும் 90-காலகட்டங்களில் இவர் இசையில் வெளியான பாடல்களே பெரும்பாலும் அதிகம் வரவேற்பை பெற்றது.
27
ரீகிரியேட் செய்து பயன்படுத்தப்படும் பாடல்:
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு... உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இவரின் பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே, பல இளம் இசையமைப்பாளர்கள் மீண்டும் இவருடைய பாடலலை ரீ-கிரியேட் செய்து தங்களுடைய படங்களில் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி இடம்பெறும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெறுகிறது.
ஆனால் இளையராஜா, இப்படி பயன்படுத்தப்படும் பாடல்களுக்கு தொடர்ந்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதற்கு எதிராக வழக்கு தொடர்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். காரணம் தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தன்னிடம் இருப்பதாகவும், தான் பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் அதற்கு தன்னிடம் உரிய அனுமதி கேட்க வேண்டும் என கூறி வந்தனர்.
47
பலமுறை நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா:
மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இவர் இசையமைத்த, 'குணா' படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்துவதற்காகவும், வழக்கு தொடர்ந்தார். அதேபோல் மற்ற சில படங்களில் பாடல்களை பயன்படுத்தியதற்காகவும் தன்னுடைய எதிர்ப்பை இளையராஜா, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் இந்த செயலை விமர்சிக்கும் விதமாக பல தயாரிப்பாளர்கள் தங்களின் எதிர்ப்பையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஒரு படத்தில் இசையமைக்க இளையராஜா பணம் வாங்கி விட்டால் அந்த பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தமே தவிர, இளையராஜாவுக்கு சொந்தம் இல்லை என கூறி வந்தார். வைர முத்துவும் இது குறித்து, மிகவும் காட்டமாக பல மேடைகளில் விமர்சித்து பேசியுள்ளார்.
67
யுவன் ஷங்கர் ராஜாவின் அகதியா பாடல் பிரச்சனை:
இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் அகத்திகா. இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இளையராஜாவின் அனுமதியோடு அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவின் இசையில் மூடு பணி படத்தில் இடம்பெற்ற 'என் இனிய பொன் நிலாவே' என்ற பாடலை ரீகிரியேட் செய்து பயன்படுத்தி இருந்தார். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்தப் பாடலின் காப்புரிமை இளையராஜாவுக்கு சொந்தமானது அல்ல என சரிகமா நிறுவனம் டெல்லியில் வழக்கு தொடர்ந்தது.
என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
இது குறித்த வழக்கு பரபராக நடந்து வந்த நிலையில், இதன் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதில் இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சரிகமப நிறுவனம் உரிய ஆதாரங்களை முன்வைத்த நிலயில், இளையராஜாவுக்கு இந்த பாடலை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை என டெல்லி ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.