2024 தமிழ் சினிமாவுக்கு மிகவும் மோசமான ஆண்டு என சினிமா வல்லுநர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் 2024-ல் தமிழ் தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் தான். இது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரு காலத்தில் தமிழில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் மற்றும் ஒரு வருடம் ஓடிய பல படங்கள் மற்ற மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. அதே போல் மற்ற மொழிகளில் ஹிட்டான படங்களும் தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. நடிகை ரவி மோகனுக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற்று தந்தது கூட மற்ற மொழிகளில் ஹிட் அடித்த ரீமேக் படங்கள் தான்.
25
விஜய்க்கு திருமுனையாக அமைந்த ரீமேக் படங்கள்:
தளபதி விஜய்க்கும், கில்லி, காவலன், நண்பன் போன்ற ரீமேக் படங்கள் ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், மற்ற மொழியை கடந்து ரசிகர்கள் ஒர்ஜினல் பதிவுகளை ரசிக்க துவங்கி விட்டனர். ஓடிடி தளங்களில், அவரவர் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு திரைப்படங்களும் வெளியாகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மொழியை விட, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் எடுக்கப்படும் படங்களே அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. இதுவரை கன்னட சினிமா, தெலுங்கு, போன்ற மொழி படங்கள் தங்களின் 1000 கோடி வசூல் படத்தை கொடுத்த போதிலும், இதுவரை தமிழில் ஒரு படம் கூட பாக்ஸ் ஆபிசில் ரூ.1000 கோடியை எட்டவில்லை. மஹாராஜா கூட மற்ற மொழிகளில் தனியாக தனியாக திரையிட்ட பின்னரே ரூ.1000 கோடி வசூல் சாதனையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
45
ரூ.1000 கோடி நஷ்டம்
இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான பிளாப் படங்கள் பற்றியும், அதனால் ஏற்பட்ட நஷ்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சுமார் 223 படங்கள் பிளாப் ஆகி உள்ளதாகவும், அதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு பிக் பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான, இந்தியன் 2, கங்குவா, தங்கலான், விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களும் அதிர்ச்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் விஷால், கடந்த இரு தினங்களுக்கு முன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது... சிறு பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க நினைப்பவர்கள் இன்னும் நான்கு ஐந்து வருடத்திற்கு எடுக்க வேண்டாம் கண்டிப்பாக அப்படி எடுக்கப்படும் படங்கள் நஷ்டத்தை சந்திக்கும். உங்களுடைய பிள்ளைகள் பெயரில் FD அல்லது ஏதேனும் சொத்துக்களை வாங்கி போடுவது லாபத்தை கொடுக்கும் என தெரிவித்தார். இவர் ஏற்கனவே இந்த கருத்தை தெரிவித்த போது அவருக்கு எதிராக பலர் கொந்தளித்த நிலையில், இப்படி ஒரு தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.