சன் டிவி சீரியல் ஹீரோ அஸ்வின் கார்த்திக்கிற்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!

Published : Feb 01, 2025, 11:44 AM IST

சன் டிவியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த, 'வானத்தைப் போல' தொடரில் ஹீரோவாக நடித்து வந்த அஸ்வின் கார்த்திக்கின் மனைவி காயத்ரி கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது இந்த ஜோடிகளுக்கு குழந்தை பிறந்த தகவலை அறிவித்துள்ளனர்.  

PREV
15
சன் டிவி சீரியல் ஹீரோ அஸ்வின் கார்த்திக்கிற்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!
கல்லூரில் படிக்கும் போதே சினிமா மீது வந்த ஆசை:

சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் நடிகர்கள், அடுத்தடுத்து தங்களை மெருகேற்றிக்கொண்டு ஹீரோவாக நடிக்க துவங்குகின்றனர். அந்த வகையில் கல்லூரியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பு தேட துவங்கியவர் தான் அஸ்வின் கார்த்திக். வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்காததால் சின்ன திரையில் கவனம் செலுத்த துவங்கினார். 

25
விஜய் டிவி சரவணன் மீனாட்சி வாய்ப்பு:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் அரண்மனைக்கிளி, மனசு, போன்ற சீரியல்களிலும் சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். 

காதலியை கரம்பிடித்தார் ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு! வைரலாகும் போட்டோஸ்!

35
வானத்தை போல சீரியல் ஹீரோ

ஹீரோ வாய்ப்புக்காக ஏங்கி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' சீரியல் வாய்ப்பு இவரின் கனவை நினைவாக்கியது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் ஹீரோவாக மாற்றப்பட்டது. இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்த அஸ்வின் கார்த்திக், கடந்தாண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலியும், மேக்கப் ஆர்டிஸ்டுமான காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
 

45
காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட அஸ்வின் கார்த்திக்

இவர்களின் திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த அஸ்வின் கார்த்திக், அவபோது மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரீல்ஸ் மற்றும் மனைவியின் பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

நிறைமாத நிலவாக சீரியல் நடிகை ஸ்ரித்திகா - கர்ப்பத்தை அறிவித்த நடிகர் SSR ஆரியன்!

55
பெண் குழந்தைக்கு தந்தையானார் அஸ்வின் கார்த்திக்

கடந்த மாதம் தன்னுடைய மனைவி காயத்ரிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு செய்து அழகு பார்த்தார் அஸ்வின் கார்த்திக். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின. தற்போது இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். அஸ்வின் கார்த்திக் மற்றும் காயத்ரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முள்ளும் மலரும், சின்னக்கவுண்டர் படங்களின் தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் காலமானார்!
 

click me!

Recommended Stories