பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் புதிய படத்தில் ராணா டகுபதி
Rana Daggubati Join with Director PS Mithran For His New Movie : பாகுபலி படம் மூலமாக உச்சம் தொட்டவர் நடிகர் ராணா டகுபதி. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. தமிழில் ஆரம்பம், பெங்களூரு நாட்கள், காடன், 1945 என்று பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவருடைய நடிப்பில் வேட்டையன் படம் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் ராணாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.
Director PS Mithran For His New Movie
இந்த நிலையில் அவரது அடுத்த படம் எது? என்ற கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது. தேஜா இயக்கத்தில் ராட்சச ராஜு படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அது படப்பிடிப்புக்கு வரவில்லை. அதேபோல், குணசேகர் இயக்கத்தில் ஹிரண்யகசிபு என்ற புராணப் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தற்போது கிடப்பில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு இயக்குனருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இயக்குனர் யார்? கதை என்ன?
அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை, கார்த்தியின் ‘சர்தார் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மித்ரன் தான். பி.எஸ். மித்ரன் தமிழ்ப் படங்களில் பிரபலமானவர். அவர் தனித்துவமான இயக்குனர். ஹீரோ (2019), சர்தார் (2022), இரும்புத்திரை (2018) போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இரும்புத்திரை, அபிமன்யுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றது.
Rana Daggubati's Next Film with Director PS Mithran
சில காலத்திற்கு முன்பு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு மித்ரன் ஒரு கதை கூறியிருக்கிறார். அந்தக் கதை சிரஞ்சீவிக்குப் பிடித்துவிட்டது. முழுக்கதையுடன் மீண்டும் வருமாறு கூறி அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு சிரஞ்சீவி வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் அந்தப் படம் கைவிடப்பட்டது. ஆனால் மித்ரனுக்கு தெலுங்கில் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் ராணாவைச் சந்தித்து கதை கூறியுள்ளார்.
அந்த கதை அவருக்கு பிடித்துப் போக மித்ரனுக்கு ஓகே சொல்லியிருக்கிறார். தற்போது மித்ரன் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ராணா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் படம் வெளியாகும். தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Rana Daggubati Join with Director PS Mithran
ராணா இந்தப் படத்தைத் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் ப்ளாட்டில் விஷால் நடித்த ‘அபிமன்யுடு படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய மித்ரன், இப்போது ராணாவுடன் எப்படிப்பட்ட கதையில் இணையப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.