மாடல் அழகி.. பல் மருத்துவர்.. இன்னும் பல திறமைகள் - யம்மாடியோ என வியக்க வைக்கும் தளபதியின் நாயகி!
Kollywood Actress : திரைத்துறையில் பயணிக்க ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, பல துறைகளில் சாதனை புரிந்து இன்று டாப் ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்து வருகிறார் ஒரு இளம் நடிகை.
Actress Meenakshi
ஹரியானாவின், பஞ்சகுலா மாவட்டத்தில் கடந்த 1997ம் ஆண்டு பிறந்த நடிகை தான் மீனாட்சி சவுத்ரி, அவருக்கு வயது 27. மீனாட்சி சவுத்ரியின் தந்தை சவுத்ரி, இந்திய ராணுவப்படையில் கர்ணலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பில் கெட்டிக்காரரான மீனாட்சி சவுத்ரி, பஞ்சாபில் உள்ள மருத்துவ கல்லூரியில் BDS பட்டம் பெற்றார்.
விமான படை முதல் போலீஸ் வேலை வரை - சினிமாவிற்காக அரசு பணியை விட்ட டாப் 4 தமிழ் நடிகர்கள்!
Meenakshi Chaudhary
ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த 2017ம் ஆண்டு தனது 20 வது வயதில் மிஸ் IMA (Indian Military Academy) பட்டத்தை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக ஃபெமினா மிஸ் இந்தியா, மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் உள்ளிட்ட அழகி போட்டிகளில் பங்கேற்ற இவர், பல வெற்றிகளையும் குவித்துள்ளார்.
Kollywood Actress Meenakshi
படிப்பும், மாடலிங் துறையும் ஒருபுறம் இருக்க, பேட்மிட்டன் மற்றும் வாலிபால் போன்ற விளையாட்டுகளிலும் தேர்ச்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி, தனது மாநிலத்திற்காக சில முறை பேட்மிட்டன் போட்டிகளை விளையாடி வெற்றியும் பெற்றுள்ளார்.
GOAT Movie
கடந்த 2019ம் ஆண்டு ஹிந்தி மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையிலும் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, ரவி தேஜா மற்றும் மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தளபதி விஜயுடன் அவர் களமிறங்குகிறார். விரைவில் வெளியாகவுள்ள தளபதியின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் அவர் தளபதியின் நாயகியாக நடித்து வருகிறார்.
“ஏற்கனவே CM; இப்போ PM.." விஜய்யின் தாய் ஷோபா சொன்னதை நோட் பண்ணீங்களா?