சித்தா பட இயக்குனர் திருமணம்; படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட்டின் வீர தீர சூரர்கள்!

சித்தா மற்றும் வீர தீர சூரன் படங்களின் இயக்குனர் சு அருண்குமாரின் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

chithha and Veera Dheera Sooran Movie Director Su Arunkumar Marriage Photos viral gan
சித்தா பட இயக்குனரின் திருமணம்

கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, நிதிலன், மணிகண்டன் ஆகியோர் வரிசையில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் தமிழில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் தான் சு அருண்குமார். இவர் பன்னையாரும் பத்மினியும் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இவர், அடுத்ததாக சேதுபதி என்கிற கமர்ஷியல் படத்தை இயக்கி அதன் மூலம் மாஸான வெற்றியையும் ருசித்தார்.

chithha and Veera Dheera Sooran Movie Director Su Arunkumar Marriage Photos viral gan
அருண்குமார் திருமணத்தில் குவிந்த கோலிவுட் பிரபலங்கள்

பின்னர் இவர் இயக்கிய சிந்துபாத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தன்னுடைய முதல் மூன்று படங்களையுமே விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய சு அருண்குமார். பின்னர் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு இயக்கிய படம் தான் சித்தா. இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தார். கம்மியான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய அளவில் வசூலித்ததோடு, உலகளவில் பல்வேறு விருதுகளையும் வென்று குவித்தது.

இதையும் படியுங்கள்...  ஜெயம் ரவி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் சீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2


இயக்குனர் சு அருண்குமார் திருமண புகைப்படங்கள்

சித்தா படத்தின் வெற்றியின் மூலம் தரமான கம்பேக் கொடுத்த சு அருண்குமார், அடுத்ததாக சீயான் விக்ரம் உடன் கூட்டணி அமைத்தார். அவர் நடித்துள்ள வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தை சு அருண்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் திரைக்கு வர உள்ளது.

வீர திர சூரன் படக்குழு உடன் இயக்குனர் சு அருண்குமார்

வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அப்படத்தின் இயக்குனர் சு அருண்குமாரின் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, நடிகை துஷாரா விஜயன், இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், சசி, தயாரிப்பாளர் அருண் விஸ்வா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது. இயக்குனர் சு அருண்குமாரின் திருமண புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... 'தங்கலான்' படத்தை விட பல கோடி அதிகம்! 'வீர தீர சூரன்' படத்திற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!