ரெட்ரோ படத்தை ஏன் மிஸ் பண்ணாம பார்க்கணும்? 10 காரணங்கள் இதோ

Published : Apr 30, 2025, 01:17 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதை மிஸ் பண்ணாம பார்க்க வேண்டியதற்கான 10 காரணங்களை இங்கே பார்க்கலாம்.

PREV
111
ரெட்ரோ படத்தை ஏன் மிஸ் பண்ணாம பார்க்கணும்? 10 காரணங்கள் இதோ

Interesting Facts About Retro Movie : சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை 2 டி நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

211
சூர்யா

ரெட்ரோ இண்ட்ரோ

ரெட்ரோ படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான இண்ட்ரோ காட்சி இருக்கும் என அப்படத்தின் எடிட்டர் ஷபீக் கூறி இருக்கிறார். இப்படியும் ஒரு இண்ட்ரோ சீன் வைக்கலாமா என எண்ணத் தூண்டும் வகையில் அந்த இண்ட்ரோ காட்சி இருக்கும் என அவர் கூறி உள்ளார்.

311
கன்னிமா பாடல்

சிங்கிள் ஷாட்

ரெட்ரோ படத்தில் இருந்து வைரல் ஹிட்டான கன்னிமா பாடல் காட்சி, முழுவதும் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டு உள்ளதாம். மொத்தம் 15 நிமிடங்கள் இந்த சிங்கிள் ஷாட் காட்சி படமாக்கப்பட்டதாம். இந்த பாடல் இடையில் சண்டைக் காட்சியும் இருக்குமாம். அதுவும் சிங்கிள் ஷாட்டில் தான் எடுக்கப்பட்டதாம்.

411
பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே டப்பிங்

ரெட்ரோ படத்தில் மிகவும் சவாலான வேடத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளாராம். வழக்கமான ஹீரோயின்போல் இல்லாமல் இதில் புதுவிதமாம இருக்குமாம். மேலும் இப்படத்தின் மூலம் முதன் முறையாக டப்பிங் பேசி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.

511
ஷ்ரேயா

ஷ்ரேயா குத்துப்பாட்டு

ரெட்ரோ படத்திற்காக நடிகை ஷ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் அவர் நடனமாடிய பாடல் இதுவாகும். இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப் பாடலை சூர்யா தான் பாடி உள்ளார்.

611
சூர்யா, ஜெயராம்

ஜெயராம் காமெடி

ரெட்ரோ படம் பற்றி அறிவிப்பு வெளியானபோது Love, Laughter, War என்கிற டேக் லைன் உடன் தான் வெளியானது. இதில் லவ், ஆக்‌ஷன் அதிகம் இருப்பதை போல் காமெடியும் நிறைய உள்ளதாம். குறிப்பாக ஜெயராம் இதில் காமெடியனாக நடித்துள்ளார். பெரும்பாலும் டார்க் காமெடி அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது

711
ரெட்ரோ சூர்யா

சூர்யா நடிப்பு

ரெட்ரோ படத்தில் நிறைய காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது தானாம். அதற்கு முக்கிய காரணம் சூர்யாவின் நடிப்பு தான் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜே பேட்டிகளில் கூறி இருக்கிறார். அதனால் இப்படம் சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

811
ரெட்ரோ நாயகன்

20 ஆக்‌ஷன் காட்சிகள்

ரெட்ரோ படத்தில் 20 ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளதாம். இதில் இந்த 20 காட்சிகளையும் நடிகர் சூர்யாவே டூப் போடாமல் நடித்துள்ளாராம். கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சி ஹைலைட் ஆனதாக இருக்கும் என ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா கம்பட்கே கூறி உள்ளார்.

911
ரெட்ரோ போஸ்டர்

12 பாடல்கள்

ரெட்ரோ படத்தில் மொத்தம் 12 பாடல்களாம். இதில் ஆறு பாடல்களை தான் ரிலீஸ் செய்துள்ளனர். எஞ்சியுள்ள ஆறு பாடல்கள் படம் பார்க்கும் போது சர்ப்ரைஸாக இருக்கும் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறி உள்ளார்.

1011
நடிகர் சூர்யா

நடனம்

கன்னிமா பாடல் ரிலீசுக்கு முன்பே சக்கைப்போடு போட்டு வருகிறது. அதிலும் ஒரு 30 விநாடிக்கு பூஜா ஹெக்டே ஆடிய ஹூக் ஸ்டெப் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. அப்பாடல் முழுக்க எப்படி ஆடி உள்ளார் என்கிற எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

1111
மே 1ல் ரிலீஸாகும் ரெட்ரோ

கம்பேக்

நடிகர் சூர்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தியேட்டரில் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி கூட கிடைக்கவில்லை. இதனால் அந்த 10 ஆண்டு காத்திருப்புக்கு முடிவுகட்டும் படமாக ரெட்ரோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories