குக் மட்டுமில்ல கோமாளிகளும் புதுசு
மேலும் இந்த சீசனில் புது கோமாளிகளையும் களமிறக்கி உள்ளனர். அந்த வகையில் புகழ், குரேஷி, சுனிதா, சரத், ராமர், என பழைய கோமாளிகள் சிலர் இருந்தாலும், புதுவரவாக பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், பாடகர் பூவையார், மற்றும் டோலி ஆகியோர் கோமாளிகளாக களமிறக்கப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சீசனில் மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு ஆகியோருடன் செஃப் கெளஷிக்கும் புது நடுவராக களமிறங்கி உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.