
சிம்ம ராசிக்கு ஐந்தாம் மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக விளங்கி வரும் குரு பகவான், குரு பெயர்ச்சிக்குப் பின்னர் 12ஆம் வீடான அயன, சயன, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். மேலும் தனது ஐந்தாம் பார்வையால் நான்காம் இடமான சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் 05-12-2026 வரை சிம்ம ராசியில் கேதுவும், ஏழாம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பார்கள். கோச்சார கிரகங்களின் நிலை சற்று சுமாராகவே உள்ளது. எனவே சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
Kanni Rasi Guru Peyarchi Palangal 2026 in Tamil | கன்னி: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்
பொதுவாக விரய ஸ்தானத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பது என்பது சிறப்பான அம்சமாகும். குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு சென்றாலும் தனது விசேஷ பார்வையின் மூலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலனை வழங்குவார் என்பதால் அதிக கவலைப்படத் தேவையில்லை. மேலும் சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே அதிக மன வலிமை படைத்தவர்கள். இவர்கள் எத்தகை இடையூறுகள் வந்தாலும் தன்னம்பிக்கையால் அடைய வேண்டிய இலக்கை அடைவார்கள்.
நீண்ட நாள் கனவுகள், லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு குரு பகவான் உங்களுக்கு வழி காட்டுவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாகும். எனவே ஆடம்பரத்தையும், அவசியத்தையும் உணர்ந்து செயல்பட்டால் குரு பெயர்ச்சி பெரிய இழப்புகளைத் தராது. குருவின் பார்வை படக்கூடிய இடங்கள் சுப இடங்களாக இருப்பதால் நல்ல முன்னேற்றத்தையும் காணமுடியும்.
Thulam Rasi Guru Peyarchi Palangal 2026 | துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
குரு பெயர்ச்சியை விட குருவின் பார்வை அதிக பலன்களை தரும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. குருவின் ஐந்தாம் பார்வை நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கலாம். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் கடினமாக உழைத்து வெற்றியைப் பெறுவீர்கள்.
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடந்த கால கடன்களில் இருந்து மீண்டு வருவீர்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். பழைய வீடு மாற்றம் அல்லது பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைவார்கள். உடல் ஆரோக்கியமும் இந்த காலகட்டத்தில் சீராக இருக்கும்.
Viruchigam Guru Peyarchi 2026 Palangal | விருச்சிகம்: குருப்பெயர்ச்சி 2026 பலன்கள்
குரு பகவானின் ஏழாம் பார்வை ஆறாம் வீடான ருண, சத்ரு, ரோக ஸ்தானத்தின் மேல் விழுகிறது. இதன் காரணமாக உங்கள் வார்த்தைகளால் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட பகை உருவாகும் சூழல் ஏற்படும். பிறர் மனதை நோகடிக்கும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். கடன் பெற்று அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் சில பகைவர்கள் கூட இந்த காலகட்டத்தில் நண்பர்கள் ஆவார்கள்.
எதிரிகள் அடிபணிந்து செல்வார்கள். பலரும் பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். பழைய கடன்களை அடைக்க புதிய வழிகள் பிறக்கும். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையையும், நடத்திக் கொண்டிருக்கும் தொழிலையும் மாற்றக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், குருபெயர்ச்சி உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
Dhanusu Guru Peyarchi 2026 Palangal in Tamil | தனுசு: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குருவின் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனி பகவானின் மேல் விழுகிறது. குரு-சனி சம்பந்தம் தர்ம கர்மாதிபதி யோகத்தை உருவாக்கும். சுமார் 8 மாத காலத்திற்கு ஏற்படும் இந்த யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியால் ஏற்படக்கூடிய தாக்கம் குறையும். தொழிலில் மன உளைச்சல் சீராகும். உத்தியோகத்தில் மாற்றங்கள் எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
“பதறாத காரியம் சிதறாது” என்ற பழமொழிக்கு ஏற்ப பதறாமல் செய்யும் காரியங்கள் நல்ல முடிவுகளைத் தரும். அஷ்டம சனியின் காலம் என்பதால் இந்த காலத்தில் நடக்கும் திருமணங்கள் பிரிவினையை ஏற்படுத்தலாம். எனவே திருமண முடிவுகளை தவிர்ப்பது நல்லது. சனிபெயர்ச்சி வரை திருமணம் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாள வேண்டியது அவசியம்.
Makaram Guru Peyarchi 2026 Palangal in Tamil | மகரம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயங்களில் 11 முறை வலம் வந்து வழிபடுவது நன்மை தரும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வர பகவானை வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)