MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Saturn Transit 2026: சனியின் வக்ர ஆட்டம்! இனி இவங்கதான் டாப்! கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

Saturn Transit 2026: சனியின் வக்ர ஆட்டம்! இனி இவங்கதான் டாப்! கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

நாம் செய்யும் நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலன்களை வழங்குவதில் இவர் மிகவும் துல்லியமானவர். யாராக இருந்தாலும் நடுநிலையாக நின்று பலன் தருவதால் இவரை "கர்ம வினைத் தீர்ப்பாளர்" என்று ஜோதிடம் கூறுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 02 2026, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சனி பகவான்
Image Credit : Asianet News

சனி பகவான்

சனி பகவானை 'மந்த காரகன்' என்றும் 'நீதிமான்' என்றும் அழைப்பார்கள். நாம் செய்யும் நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலன்களை வழங்குவதில் இவர் மிகவும் துல்லியமானவர். யாராக இருந்தாலும் நடுநிலையாக நின்று பலன் தருவதால் இவரை "கர்ம வினைத் தீர்ப்பாளர்" என்று ஜோதிடம் கூறுகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் ஒரு முக்கிய கிரக மாற்றம் நிகழவுள்ளது. அதன்படி, 2026 ஜூலை 27 முதல் சனிபகவான் மீன ராசியில் 'வக்ர கதி' அடைந்து பயணிக்கத் தொடங்குகிறார். பொதுவாக சனி வக்ரம் அடையும் போது அதிக ஆற்றல் மிக்கவராக மாறுவார். இந்த வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளின் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்ன என்று பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி சனிபகவானின் முழுமையான ஆசியைப் பெற்றுத் தரவுள்ளது. எதிர்பாராத பண வரவும், திடீர் நிதி ஆதாயங்களும் உண்டாகும். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலம். நீண்ட நாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தூரத்துப் பயணங்களை இப்போது மேற்கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதியும், கணவன்-மனைவி இடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதால், சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

Related Articles

Related image1
Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!
Related image2
Venus Transit 2026: ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! ராஜயோகம், வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.!
35
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்குச் சனியின் வக்ர நிலை மங்களகரமான பலன்களையும், அசாத்திய தைரியத்தையும் கொடுக்கும். உங்களின் ஆளுமையும், தன்னம்பிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். எந்தவொரு சவாலான காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடித்து லாபம் காண்பீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் அல்லது அலுவலகத்தில் இடமாற்றம் (Job Change) பெற நினைப்பவர்களுக்கும் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். குறிப்பாக, வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களின் கனவு இந்த காலகட்டத்தில் நனவாகும்.

45
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த இருள் மறைந்து, வசந்த காலம் தொடங்கப் போகிறது. நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த பணப் பிரச்சனைகள் மற்றும் கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்ததை விடவும் பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்குப் புதிய ஆர்டர்கள் கிடைத்து, அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். மன அழுத்தங்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைக்கு ஆச்சரியமான பரிசுகளை வழங்கி மகிழ்விப்பீர்கள். நண்பர்களுடன் இன்ப உல்லாசப் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் கூடி வரும்.

55
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது. நீண்ட நாட்களாக வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவு இந்த காலகட்டத்தில் தடையின்றி நிறைவேறும். சமுதாயத்திலும் நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் உங்களுடைய புகழும் அந்தஸ்தும் உயரும். உங்களின் தைரியமும் வீரியமும் கூடும். அலுவலகத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய முதலீடுகள் மூலம் அசுர லாபம் ஈட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவு இந்த காலகட்டத்தில் தடையின்றி நிறைவேறும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: உயிரே போனாலும் இந்த 5 பேர் வீட்ல சாப்பிடாதீங்க! சாணக்கியர் எச்சரிப்பது ஏன்?
Recommended image2
Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!
Recommended image3
Garuda Purana: மரணத்திற்கு பின் ஆன்மா எத்தனை நாள் வீட்டிலேயே இருக்கும்? எப்போது வீட்டை விட்டு வெளியேறும் தெரியுமா? கருட புராணம் சொல்வது என்ன?
Related Stories
Recommended image1
Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!
Recommended image2
Venus Transit 2026: ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! ராஜயோகம், வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved