இளம் பெண்ணை பூட்டி வைத்து ஆசை தீர உல்லாசம்... மதம் மாற்றி திருமணம்... கொத்தா பிடித்து துக்கிய போலீஸ்

இளம் பெண்ணை கடத்திச் சென்ற அறையில் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது. உத்திர பிரதேசத்தில் சம்பவம் நடந்துள்ளது. 

Youth arrested for kidnapping young woman, raping her and marrying her as a convert.

இளம் பெண்ணை கடத்திச் சென்ற அறையில் பூட்டி வைத்து பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அந்தப் பெண்ணை மதம் மாற்றி இளைஞர் திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

சமீபகாலமாக காதல் என்ற போர்வையில் மதமாற்ற சம்பவங்கள் நடந்து வருவது அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் மற்றொரு மதமாற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, ஒரு இளம் பெண்ணை காதலிப்பது போல் நடித்து பின்னர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பல நாட்கள் அறையில் அடைத்து வைத்து, பலாத்காரம் செய்து, பின்னர் அந்த பெண்ணை மதமாற்றி திருமணம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் கக்ரேரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான ரக்ஷ்பால்பூர்  கிராமத்தை சேர்ந்தவர் சோயிப் மன்சூர்,

Latest Videos

இதையும் படியுங்கள்: 44 வயதில் கல்லூரி மாணவியா.. இந்து கடவுள்களை அவமானப்படுத்த கனடா பயணம்.. லீனா மணிமேகலை மீது புகார்.

இவர் தனது  நண்பன்  கலீமின் உதவியுடன் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடத்திச் சென்றார். ஜூன் 21ஆம் தேதி இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணை ரேபரேலி அழைத்துச்சென்று அங்கு ஒரு அறையில் அந்த பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் மறுநாள் அங்கிருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்று உறவினர் ஒருவரின் வீட்டில் அந்தப் பெண்ணை அடைத்து வைத்து அங்கு பலமுறை பலாத்காரம் செய்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி  அந்தப்பெண்ணை மன்சூர் பதேபூருக்கு அழைத்து வந்தபோது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: கள்ளக்காதலன் நான் இருக்கும்போது வேற ஒருத்தவங்க கிட்ட போற.. ஓயாமல் டார்ச்சர்.. பெண் செய்த பகீர் சம்பவம்.!

இதுகுறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் சோயிப் மன்சுர் அவரது நண்பரின் உதவியுடன் என்னை கடத்தி இங்கிருந்து ரேபரேலிக்கு அழைத்துச் சென்றார், பின்னர் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து அன்று இரவு என்னுடன் உடலுறவில் ஈடுபட்டார், பின்னர் மறுநாள் என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்று உறவினர் ஒருவர் வீட்டில் பிணைக்கைதிபோல அடைத்து வைத்திருந்தார். பின்னர் பல நாட்கள் அவரால் நான் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டேன். பின்னர் மதமாற்றம் செய்து சோயிப் என்னை திருமணம் செய்து கொண்டார். என்னை அவரது திருமண பதிவில் கையெழுத்து வாங்க வைத்து வேறு இருவரிடமும் அதற்கு சாட்சி பெற்றனர்.

பின்னர் ஜூலை 7 அன்று லக்னோவிற்கு அழைத்துச் சென்று தனது உறவினர்களிடம் என்னை தங்க வைத்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் என்னை சோயிப் பலமுறை பாலியல்  பலாத்காரம் செய்தார். பின்னர் அவர்கள் உறவினர்கள் மத்தியில் என்னை தனது மனைவி என்று அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜூலை 9-ஆம் தேதி நாங்கள் பதேபூர் திரும்பி வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர், என அவர் கூறினார். இந்நிலையில் போலீசார் சோயிப் மன்சூர் மீது பாலியல் பலாத்கார 376 மற்றும்  மதமாற்றத்திற்கு எதிராக உத்தரப்பிரதேச மாநில அரசின் சட்டம் 3, 5 (1 ) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதையும் படியுங்கள்: சிறுமியை சீரழித்து அடிக்கடி காம களியாட்டம் ஆடிய இளைஞர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

click me!