ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்று வட இந்தியாவின் பல பகுதிகளில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.