India vs New Zealand : இந்தியா வெற்றி பெற்றதற்கான முக்கியமான 5 சிறப்பு அம்சங்கள்!

Published : Mar 09, 2025, 11:48 PM ISTUpdated : Mar 09, 2025, 11:49 PM IST

Top 5 Key Points for Team India became 3rd Time Champions in ICC Events : நியூசிலாந்திற்கு எதிராக இன்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்துள்ளது.

PREV
18
India vs New Zealand : இந்தியா வெற்றி பெற்றதற்கான முக்கியமான 5 சிறப்பு அம்சங்கள்!

Top 5 Key Points for Team India became 3rd Time Champions in ICC Events : ஐசிசி சாம்பியன்ஸ் டிரபி 2025 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியனாக மகுடம் சூடியது. இந்தியா இந்தப் போட்டியில் ஜெயிப்பதற்கு ஸ்பின்னர்கள் முக்கிய காரணம். ரோகித் சர்மாவின் அதிரடியான அரைசதம், ஷ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பு, கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் வின்னிங் மூவ்மெண்ட் என்று எல்லாமே காரணமாக அமைந்துவிட்டன. அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

28
Top 5 Key Points for Team India became 3rd Time Champions in ICC Events

இந்தியா vs நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி: இந்தியா, நியூசிலாந்தை இறுதிப் போட்டியில வென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பையை தட்டி தூக்கியது. இந்திய அணி தொடர்ந்து 5 போட்டியிலும் வெற்றி பெற்று டிராபியை தங்களுக்கு சொந்தமாக்கியது. இறுதிப் போட்டியிலயும் கீவிக்கு எதிரா இந்திய வீரர்கள் வேற லெவல்ல பெர்ஃபார்ம் பண்ணி அசத்திட்டாங்க. முதல்ல பௌலிங் பண்ணி பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வெச்சாங்க, அப்புறம் பேட்டிங்லயும் பின்னிட்டாங்க. 6 பால் இருக்கும்போதே மேட்சை முடிச்சுட்டாங்க.

38
IND vs NZ Final

மறுபடியும் இந்தியா 12 வருடங்களுக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கையில் ஏந்தியது. அதுமட்டுமில்ல, ரோகித் தலைமையிலான அணிக்கு 3ஆவது தடவ கோப்பையை முத்தமிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுல நம்ம இந்திய அணி சாம்பியன் ஆகுறதுக்கு காரணமான முக்கியமான மொமெண்ட்ஸை பார்க்கலாம் வாங்க.

48
India vs New Zealand Final

வருண் சக்கரவர்த்தியோட சுழலில் சிக்கிய கீவி பேட்ஸ்மேன்கள்

டாஸ் வென்று முதலி பேட்டிங் செய்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஸ்டார்ட் பண்ணி 6 ஓவரில் விக்கெட் இல்லாமல் 59 ரன்கள் அடித்தனர். ஆனால், அதன் பிறகு ரோகித் சர்மா தனது நம்பிக்கையான வருண் சக்கரவர்த்தியை பந்து வீச அழைத்தார். அவரும் தனது சுழல் மாயாஜாலத்தால் வில் யங்கை ஆட்டமிழக்கச் செய்தார். இங்கிருந்து இந்திய அணியின் பக்கம் போட்டி திரும்பியது.

58
Virat Kohli and Rohit Sharma

குல்தீப் யாதவ் ஃபார்ம்ல இருந்த ரச்சின், வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தது

வருண் முதல் விக்கெட்டை எடுத்ததுக்கு அப்புறம் நம்ம இந்திய அணி கீவி மேல ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சாங்க. அப்புறம் குல்தீப் யாதவ் பௌலிங்ல வந்து முதல் பால்ல ரச்சின் ரவீந்திராவை பெவிலியனுக்கு அனுப்பி வெச்சாரு. அதோட நிக்காம செமிஃபைனல்ல செஞ்சுரி அடிச்ச கேன் வில்லியம்சனையும் காலி பண்ணி டாப் ஆர்டரை கதற வெச்சுட்டாரு.

68
Top 5 Key Points for Team India became 3rd Time Champions in ICC Events

மிடில் ஓவர்ல ஸ்பின்னர்கள் ரன்ஸ கட்டுப்படுத்தினது

கீவி பேட்ஸ்மேன்களோட விக்கெட் விழுகுறது நிக்கவே இல்ல. 10ல இருந்து 40 ஓவர் வரைக்கும் தொடர்ந்து விக்கெட் விழுந்துட்டே இருந்துச்சு. பெரிய பார்ட்னர்ஷிப் இல்லாததால நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க முடியல.

78
ICC Champions Trophy 2025

பேட்டிங்ல ரோகித் சர்மா கேப்டன் இன்னிங்ஸ் ஆடியது

252 ரன் டார்கெட்டை சேஸ் பண்ணும்போது கேப்டன் ரோகித் சர்மா அதிரடியா ஸ்டார்ட் பண்ணி பவுண்டரி, சிக்ஸரா அடிச்சு நொறுக்கிட்டாரு. பவர் பிளேல எப்பவும் பண்ற மாதிரி ஃபைனல்லயும் அதையே பண்ணாரு. ரோகித்தோட பேட்ல இருந்து 76 ரன் வெளுத்து வாங்குனாரு. அதனால இந்திய அணிக்கு டார்கெட் ஈஸியா மாறிடுச்சு.

88
Champions Trophy 2025

ஷ்ரேயாஸ்-அக்சர் பார்ட்னர்ஷிப்போட, ராகுல், ஜடேஜாவின் அதிரடி ஃபினிஷிங்

ஒரு கட்டத்துல இந்திய அணி மூணு விக்கெட்டை இழந்து தடுமாறிட்டு இருந்தாங்க. ஆனா, ஷ்ரேயாஸ் ஐயரும், அக்சர் படேலும் விக்கெட்டை காப்பாத்தி சூப்பரா பார்ட்னர்ஷிப் போட்டாங்க. ஐயர் 48 ரன் அடிச்சாரு, அக்சரும் 29 ரன் எடுத்தாரு. கடைசியில ராகுல் பேட்டிங் வந்து 33 பால்ல 34 ரன் அடிச்சு மேட்சை முடிச்சு இந்தியாவ ஜெயிச்சு கோப்பைய வாங்கிக் கொடுத்தாரு.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories