வழக்கறிஞர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! பழிக்கு பழியா? பகீர் கிளப்பும் தகவல்!

Published : Mar 07, 2025, 03:57 PM ISTUpdated : Mar 07, 2025, 04:05 PM IST
வழக்கறிஞர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! பழிக்கு பழியா? பகீர் கிளப்பும் தகவல்!

சுருக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வழக்கறிஞர் உத்திரகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் உத்திரகுமார் (35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வந்தார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வாரச்சந்தை, மீன் மார்க்கெட் போன்ற பொது ஏலங்களிலும் கலந்து கொண்டு ஏலம் எடுத்து வந்துள்ளார்.

இவர் மீது ரியல் எஸ்டேட் மோசடி வழக்குகள், கொலை வழக்கு, கொடுக்கல் வாங்கல் வழக்குகள், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பழனிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அவரது சகோதரி ஜோதிமணி வீட்டுக்கு உத்திரகுமார் சென்றுக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க: 42 வழக்குகள்! இரண்டு முறை குண்டர் சட்டம்! யார் இந்த படப்பை குணா? மிரள வைக்கும் க்ரைம் ரிப்போர்ட்!

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் உத்திரகுமாரை தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உத்திரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  அதிகாலையிலேயே அலறிய தூத்துக்குடி! குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உத்திரகுமார், பழனிச்சாமி இடையே ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் பழனிச்சாமியை கூலிப்படையினரை வைத்து உத்திரகுமார் 2024ம் ஆண்டு கொலை செய்தார். இந்த வழக்கில் உத்திரகுமார் கைதாகி சிறையில் இருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியில் வந்தார். எனவே, பழனிச்சாமி தரப்பினர் பழிவாங்கும் விதமாக உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
TASMAC Holiday: மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!